உங்கள் வயதை குறைத்து காட்ட வேண்டுமா 

முதிர்ச்சி வெளிப்படுத்தும் அடையாளங்களை மாற்றிக்கொள்வது எப்படி?
உங்கள் வயதை குறைத்து காட்ட வேண்டுமா 

தினமும் நாட்களை கடந்து மாதங்களை கடந்து வருடங்களை கடக்கும் போது நாமும் முதிர்ச்சியினை அடைந்துகொள்வது சாதாரணமான விடயம் ஆகும். ஆயினும் வயது முதிர்ச்சி ஏற்படும்போது நமது உடலியல் மாற்றங்களும் நமது தோற்றத்தினை மாற்றுகின்றது. இதனால் பலருக்கு கவலை ஏற்படுவதை காணக்கூடியதாக இருக்கும்,

மனவியல் வெளிப்பாடுகளும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கினை வகிப்பதாகும். வயது முதிர்வு, நரை திரை மூப்பு மாற்றங்கள் போன்றன மனிதனை மனதளவில் மாற்றமடைய செய்வதுடன் உடலியல் ரீதியிலும் மாற்றம் ஏற்படுத்துவதன் காரணத்தினால் ஆரோக்கிய நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட தவறுவதில்லை.

  • முதிர்ச்சிநிலை காரணிகள் 

மன அழுத்த காரணிகளாலும், எமது பரம்பரை, உணவு போன்ற பழக்க வழக்கங்களினாலும் ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே முதிர்ச்சியான தோற்றம் வெளிக்காட்டப்படுகின்றது.அத்துடன் புற சூழல் காரணிகள் மற்றும் மெலனின் மாற்றங்கள், சூரிய கதிர் காற்று என சூழலியல் காரணிகளாலும் முதிர்ச்சிக்கான தோற்றம் மனித உடலில் வெளிக்காட்டப்படுவதை தவிர்த்திட முடியாது.

முதிர்ச்சி நிலை பராமரிப்பு. 

ஒரு சில புற சூழல் காரணிகள் மூலம் ஏற்படக்கூடிய முதிர்ச்சிநிலையினை கட்டுப்படுத்திக்கொள்ள சில எளியவகை பராமரிப்புக்களை மேற்கொள்ளலாம். அடிப்படையில் வெளியே செல்லும்போது சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களின் விளைவுகளால் எமது தோல் மற்றும் சரும நிலைகளில் மாற்றம், நோய், ஒவ்வாமை போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சில வீட்டு உபயோக பொருட்களை கொண்ட பராமரிப்புக்களை மேற்கொள்ளலாம்.

வீட்டில் உள்ள இந்த பொருட்களை கொண்டு எவ்வாறு பராமரிப்பினை மேற்கொள்வது என பார்க்கலாம்.

எலுமிச்சம் பழ சாறு.

எலுமிச்சம்பழ சாற்றில் இருக்க கூடிய சிட்ரிக் அமிலமானது சருமத்தில் உள்ள அணுத்துகள்களை உடைக்கும் வல்லமை கொண்டது.எனவேதான் எலுமிச்சம் சாறு ஒரு சிறந்த பிளீச் பொருளாக கருதப்படுகின்றது. இதன் மூலம் பழைய அழுக்கு நிறைந்த மேல் தோல் நீக்கப்பட்டு புதிய தோலல் வெளிப்பட வாய்ப்புக்கள் உண்டு. எலுமிச்சம் சாற்றினை தொழில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் இடங்களுக்கு தடவி பின் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிட வேண்டும் . முக்கியமாக இந்த அணுகுமுறையை பின்பற்றிய உடனேயே வெயிலில் செல்வதை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆப்பிள் சீடர் .

ஆப்பிள் சீடரின் அல்பா ஹைட்ரொக்சிட்(Alpha hydoxit) அமிலம் உள்ளது. இந்த வேதிப்பொருளினை இக்காலத்தில் உள்ள சில அழகு சாதனா பொருட்களிலும் காணலாம். ஒரு சிலருக்கு சீடரை முதன்முதலில் சருமத்தில் உபயோகப்படுத்தும்போது எரிச்சல் நிலை ஏற்படும். சீடரை தேனில் கலந்து முதிர்ச்சியான தோன்றும் இடங்களில் தடவி வந்தால் நல்ல பலாபலன் கிடைக்கும்.

விளக்கெண்ணெய். 

விளக்கெண்ணெயில் அதிக அளவு நோயெதிர்ப்பு சக்தி மூலங்கள் உள்ளது. இது பொதுவாக முதிர்ச்சிநிலையினை தடுக்கவும், வெளிக்காட்டப்படுவதை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது. விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் முதிர்ச்சி தோற்றம் விரைவில் மறையும் வாய்ப்புள்ளது.

பால் .

பொதுவாக சருமபராமரிப்பு சாதனைகளில் கூட அதிகளவு பால் பயன்படுத்தப்படுவதனை இந்தக்காலத்தில் அறியலாம். பாலில் உள்ள லாக்டோ வேதிப்பொருள் இதற்கு காரணம் ஆகும். மிகவும் மென்மையான சருமத்தினருக்கான சிறந்த பாதுகாப்பு முறைமை பால் ஆகும். காரணம் சருமத்திற்கு எதுவித சேதாரமும் இல்லாமல் இறந்த செல்களை அகற்றுவது பாலின் நற்குணமாகும்.

தக்காளி சாறு .

தாக்களிப்பழத்திலும் அமிலத்தன்மை உள்ளது. ஆயினும் அது ஒப்பீட்டளவில் எலுமிச்சத்தை விட குறைவாகும். இதனால் தோல் பராமரிப்புக்கு சிறந்த வேதிப்பொருளாக தக்காளி சாற்றினை சொல்லலாம். அத்துடன் தக்காளி சாற்றின் மென்மைத்தன்மை காரணமாக சருமத்தில் இலகுவாக ஊடுருவிக்கொள்ளும் தன்மை தக்காளி சாற்றுக்கு உண்டு. அத்துடன் சருமத்தை குளிரவும் செய்கின்றது.

விட்டமின் ஈ எண்ணெய்

சரும நிறமிழப்பு குறைத்து நிறத்திட்டுக்களை குறைத்துக்கொள்ள விட்டமின் ஈ உதவுகின்றது.
விட்டமின் ஈ மாத்திரைகளில் உள்ள எண்ணெயினை எடுத்து முதிர்ச்சி திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவ கருவளையம், நிறமிழப்பு போன்ற விடயங்கள் மறையும். 

மஞ்சள். 

பன்னெடுங்காலமாக சருமபராமரிப்புக்கு எமது முன்னோர்கள் பயன்படுத்திவந்த பொருள் மஞ்சள். இது சிறந்த கிருமிநாசினியும் கூட சருமத்தினை மென்மையாக மாற்ற மஞ்சளை தினமும் பயன்படுத்துவது சிறந்த பலாபலனை தரும். 


 

Article By TamilFeed Media, Canada
2802 Visits

Share this article with your friends.

More Suggestions | Health