முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்

முடி உதிர்வை தடுக்க எளிய வழிகள்

நமது அன்றாட கவலைகளில் பலரின் முக்கிய கவலையாக இருப்பது இந்த முடி உதிர்தல் பிரச்சினை தான். தினமும் தலை வாரும்போது சீப்பில் அதிகளவிலான முடி உதிர்வதை கண்டதுமே நமது மனம் உடைந்து விடுகின்றது. பொதுவாக முடி உதிர்வது என்பது சாதாரணமானது என்றாலும் அதிகளவில் முடி உதிர்வதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு காணப்படும் போது கண்டிப்பாக ஏதும் உடல்நல கோளாறுகள் உள்ளனவா என்று வைத்தியரை அணுகுவது நல்லது.


தலை முடி பிரச்சினைகளுக்கு கண்ட எண்ணெய்களை வாங்கி உபயோகிப்பது, மற்றும் இரசாயன தைலங்களை, மருந்துகளை உபயோகப்படுத்துவது என்பதை முடிந்தளவில் தவிர்த்து கொள்ளுவது நல்லது . இதன் மூலம் பல பக்க விளைவுகளை விலை கொடுத்து வாங்கி விடாதீர்கள். அதற்கு மாறாக இயற்கை வழியில் வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து உங்கள் முடியை பராமரிக்க சிறந்த வழிகள் இதோ 

 வேப்பிலை 

முதல் நாளே ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து அதனை தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். மறுநாள் அந்த சாற்றை தலையில் தடவி கழுவிக்கொள்ள வேண்டும் . இப்படி தொடர்ந்து செய்யும் போது முடி உதிர்வை தடுக்கலாம் .

வெந்தயம் 
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 

நெல்லிக்காய் 
சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். 

தாமரைப்பூ 
சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். 

முளைக்கீரை 
முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலை 
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும் 

வெந்தயக்கீரை 
கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும். 

தேங்காய் எண்ணெய் 
ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும். 

தேயிலை தூள் 
தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற் றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 

செம்பருத்தி இலை 
10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீயக்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும். 

மருதாணி 
இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.

 கீழாநெல்லி
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர வழுக்கை மறையும். 

அதிமதுரம் 
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும். தலையில் உள்ள பொடுகு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.

Article By TamilFeed Media, Canada
8288 Visits

Share this article with your friends.

More Suggestions | Health