மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை அறிகுறிகளே

இச்சையை மட்டுமில்லை நோய் அறிகுறிகளையும் இவை தூண்டும்

பெண்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்ற பொக்கிஷமாக இந்த மார்பகங்களை கருதலாம். இது இச்சையை தூண்டும்பொருளாக மட்டும் பார்க்கப்படுவது கவலைக்கிடம்.மாறாக அந்த மார்பகங்களில் அனுமானிக்க கூடியமாற்றங்கள் நமக்கு வரவிருக்கும் நோய்களுக்கான முற்கூட்டியே அறிகுறிகளின் வெளிப்படுத்தல்கள் என்பதை அறிவீர்களா? 


பெண்கள் பொதுவாக பாலியல் சம்பந்தமான விடயங்களை கலந்து ஆலோசிக்கவோ அல்லது அதுபற்றி வெளியில் பேசவோ தயக்கம் காட்டுவது அவர்களின் குணவியல்பாகும்.இது கண்டிப்பாக மாற வேண்டிய ஒன்றாகும்.பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும்.ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

உங்களுடைய மார்பகத்தைக் கொண்டே உங்களின் உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது என நீங்கள் அறிந்து கொள்ள சில வழிமுறைகள் 

 
வளர்ச்சி 
மார்பகம் மிக குறுகிய காலத்தில் திடீரென்று வளர்ச்சியடைகிறதா என்று பாருங்கள். மார்பகத்தில் கொழுப்பு செல்கள் தான் நிறைந்திருக்கிறது. அதோடு இதில் க்ளாண்டுலர் திசுக்கள் இருக்கின்றன.எனவே வித்யாசமான வளர்ச்சித்தன்மை காணப்படுமிடத்து கட்டாயமாக கவனிக்கப்படல் வேண்டும்.

ஹார்மோன் 
கர்ப்பமடைந்திருப்பது, தாய்ப்பால் கொடுப்பது போன்ற காரணங்களால் மார்பகம் சற்று தளர்ந்திருக்க வாய்ப்புண்டு ஆனால் இவை அல்லாத நேரத்தில் மார்பகம் தளர்ந்திருந்தாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ மருத்துவரை சந்திப்பது அவசியம்.

கர்ப்பத்தடை மாத்திரை சாப்பிட்டால், மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தின் போது சிலருக்கு மார்பகம் தளர்ந்திருக்கும்.மார்பகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோனுக்கு மிகவும் கூர் உணர்ச்சியுடையதாக இருக்கும்.


சுருங்குதல் 
உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம்.

தைராய்டு 
மார்பகங்களில் ஃபேட்டி திசுக்கள் தான் நிறைந்திருக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து எடுக்கக்கூடிய பிரயத்தனங்கள் உங்கள் மார்பகத்தையும் குறைத்திடும். அதோடு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தாலும் குறைக்கும். ஓவர் ஆக்டிவ் தைராய்டு இருப்பவர்களுக்கும் மார்பகம் குறையும்.


மாதவிடாய்
மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது.

இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அலர்ஜி
உங்களுக்கு பொருந்தாத உள்ளாடை அணிவதாலும், அதீத வியர்வையினால் அங்கே உருவாகும் பாக்டீரியாவினாலும் பெண்களுக்கு மார்பக பகுதிகளில் அரிப்பு உண்டாவது உண்டு. சிலருக்கு சோப், பாடி ஸ்ப்ரே,டிடர்ஜண்ட் அலர்ஜியினால் கூட ஆவதுண்டு.

இதற்காக ஹைட்ரோகோர்டிஸோன் க்ரீம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு அலர்ஜி குறையவில்லை என்றால் மருத்துவரை சந்திக்கலாம்.

கர்ப்பப்பை நோய்க்குறி (Ovarian syndrome )
மார்பகத்தில் முடி வளர்ச்சியிருந்தால் உங்கள் உடலில் டெஸ்ட்டிரோன் அளவு உயர்ந்து விட்டதாக அர்த்தம்.உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தினால் அட்ரீனல் சுரப்பி அளவுக்கு அதிகமாக ஆண்மைக்கான ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்.

இதன் அறிகுறிகள் உங்கள் மார்பகங்களிலும், முறைய மாதவிடாயினாலும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இவை தொடரரும் பட்சத்தில் உங்கள் கர்ப்பையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்தும் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

முலைசுரப்பி (Nipple)
நிப்பில் கார்சினோமா என்று வழங்கப்படுகிற இந்தப் பிரச்சனை அரிதான புற்றுநோயின் ஓர் வடிவம். நிப்பிலைச் சுற்றி அரிப்பது, நிப்பிலின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாவது,நிப்பிலிருந்து ஏதேனும் திரவம் வெளியாவது ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

சிலருக்கு நிப்பிலின் வடிவம் கூட மாறியிருக்கும்.


தாய்ப்பால் 
குழந்தை பிறந்த பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் இருந்து பால் வரும் என்பது எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது கர்ப்பமோ அல்லது தாய்ப்பால் கொடுக்காத போதே மார்பகத்தில் இருந்து பால் போன்ற திரவம் வரும் இதற்கு காரணம் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய மருந்துகள் தான்.

நீங்கள் சாப்பிடும் சில மருந்துகளால் உங்கள் உடலில் இருக்கிற ப்ரோலாக்டீன் அதிகரிக்கும். இந்த ப்ரோலாடீன் என்ற ஹார்மோன் தான் தாய்ப்பல உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


உப்பு 
நீங்கள் அதிகமாக உப்பு சேர்க்கிறீர்கள் என்பதைக்கூட உங்களின் மார்பகங்களைக் கொண்டே கண்டறியலாம். மார்பகத்தில் காரணமில்லாமல் வலி உண்டானால் நீங்கள் உங்கள் உணவுகளில் இருந்து உப்பு மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவை குறைக்க வேண்டும்.


காபி
கேஃபைன் நிறைந்த பொருட்களான காபி போன்ற பானங்களையும் நீங்கள் தவிர்ப்பது ந���்லது. கேஃபைன் பொருட்கள் உங்கள் மார்பகங்களில் ரத்த ஓட்டத்தை தடுப்பதால் கூட உங்களுக்கு வலி ஏற்படும். சிலருக்கு மார்பகம் மிகவும் கடினமானதாகக்கூட தோன்றிடும்.


இரும்புச் சத்து குறைபாடு
தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்ய ஐயோடின் எந்த அளவிற்கு முக்கியமோ அதேயளவு இரும்புச்சத்தும் முக்கியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவென்றால் அது ரத்த சோகை மட்டுமல்லாத உங்கள் மார்பகங்களிலும் அந்த மாற்றங்கள் தெரியும்.

Article By TamilFeed Media, Canada
3928 Visits

Share this article with your friends.

More Suggestions | Health