தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோகியங்கள்..

ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்தால் உடலுக்கு நலம் தரும்.

உடலிலுள்ள செல்களுக்கு உயிர்வளியைக் (ஆக்ஸிஜன்) கொண்டு செல்வது தண்ணீர்தான். நம் உடலில் தட்பவெப்ப நிலையைச் சீராக வைக்கத் தண்ணீர் அவசியம். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் சிறுநீரகம் பாதிக்கப்படும், உடல் முழுவதும் பாதிப்படையும், மூட்டுகள் தேயும், மலச்சிக்கல் ஏற்படும். மூளை செயல்பாட்டிற்கு முதன்மையானது தண்ணீர். தண்ணீர் சரியாகக் குடிக்கவில்லையென்றால் மூளை செயல்பாடு குறையும். தலைவலி, மயக்கம் போன்றவையும் உடல்சோர்வும் ஏற்படும்.

உண்ணும்போது சில நேரங்களில் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டிவரும். அப்போது, அளவோடு சிறிதளவு தண்ணீர் அருந்த வேண்டும். மற்ற நேரங்களில் தண்ணீர் வேண்டிய அளவு அருந்தலாம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நலம் காக்க இது பெரிதும் உதவும். உடல்நலம் தண்ணீர் குடிப்பதில்தான் அடங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. 

சிறுநீரையும், மலத்தையும் அடக்கக் கூடாது சிறுநீர் 4 மணி நேரத்திற்கு ஒருமுறையும், மலம் காலை மாலை இருவேளையும் கழிக்க வேண்டும். வெப்ப காலத்தில் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும் குளிர் காலங்களில் 2 லிட்டராவது குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் அவசியமின்றிக் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பின் தண்ணீர் குறைவாகக் குடிக்க வேண்டும். சாப்பிட்டு 1 மணி நேரத்திற்குப் பின் தேவையான அளவு தேவையான நேரத்தில் குடிக்க வேண்டும்.

வாய் ருசிக்காக வீட்டில் செய்யும் நொறுக்குத் தீனிகளைக் குறைவாகச் சாப்பிடலாம். அதிலும் உப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். அது நல்லதல்ல. நாம் உணவு உண்ணத் தொடங்கியதுமே, செரிமானத்திற்குரிய சுரப்பிகள் சுரக்கத் தொடங்கும். அப்போது உணவோடு தண்ணீரையும் அருந்தினால், அத்தண்ணீர் செரிமான நீர்களுடன் சேர்ந்து செரிமானத்தைப் பாதிக்கும். 

Article By TamilFeed Media, Canada
2797 Visits

Share this article with your friends.

More Suggestions | Health