கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 7 வினோத  பழக்கவழக்கங்கள் 

நீங்கள் எதிர்பாராததும், விநோதமானதுமான ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய விடயங்களும் அதிலிருந்து பராமரிப்பு பெறவேண்டிய முறைகளும்.

சிறுவயதில் நாங்கள் உண்ணும் பழத்தின் விதைகளை தவறுதலாக விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும் என்றும் பயமுறுத்தப்பட்டு இருப்போம். இப்போது நினைத்தால் அவ்வகையான சில காரணிகள் நமக்கு கேலியாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். 

எவ்வாறாயினும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதில்லை இருந்து தவிர்த்துக்கொள்ளவே இவ்வகையாக நமக்கு வினோதமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்பதை நாம் பின்னரே அறிந்துகொள்வோம்.

இவ்வாறு நமது அன்றாட வாழ்வில் நாம் மறந்துபோன மற்றும் வியப்பானதும் விநோதமானதுமான பழக்க வழக்கங்கள் சில நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவையாக அமைந்தவை என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டோம். கவனக்குறைவால் மற்றும் எமது அசட்டை போக்கால் நாம் செய்ய மறந்த விடயங்களால் எமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நாம் உணர்ந்திருக்க மாட்டோம். 

இவ்வாறு விளையாட்டாக நினைத்து மறந்துபோன,என்றாலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் இவைதான்.

1.சாப்பிட்ட உடனேயே பல் துலக்க கூடாது.

நாம் ஏதேனும் உணவினை உட்கொண்ட உடனேயோ அல்லது பானங்களை குடித்ததும் பற்களை துலக்க கூடாது. குறிப்பாக சிட்ரிக் அமிலங்களை அதிகளவில் கொண்ட உணவுகளான பழங்கள், தக்காளி உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டதும் நாம் பற்களை துலக்க கூடாது. இவ்வகை சிட்ரிக் அமிலமானது பற்களில் இருக்கும் பட்சத்தில் நாம் பற்களை துலக்குவோமானால் பல்லின் ஈறுகளில் பாதிப்பு மற்றும் பற்களின் சிராய்ப்பு போன்ற உபாதைகளுக்கு உள்ளாக்குவோம் என அறியப்படுகின்றது. எனவே உணவு அல்லது பானங்கள் அருந்தி ஒரு மணித்தியாலம் கழித்த பின்னரே பற்களை துலக்க வேண்டும்.

2. உடற் தசைகளை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளுங்கள்.

தசைகள் என்பது நமதுஉடலில் உள்ள கொழுப்பின் அளவினை அதிகமாக்கும் செயல் ஆகும். ஒரு கிலோகிராம் உடலின் தசை அதிகரிக்கப்படும் என்பது உடலுக்கு தேவையற்ற மேலதிக கொழுப்பு படித்தாலே ஆகும். பொதுவாக நாம் யோசித்ததுண்டு உடல் பருமன் கூடியவரை விட பருமன் குறைந்தவர்கள் வலிமை கூடியவர்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. உடல் பருமனுக்கும் வலின்மைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

3. உடல் எடையை குறைப்பதற்கு அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொள்ளவும்.

காபோஹைதரேற்று நமது அன்றாட உணவில் கிடைக்க கூடிய ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது வெறுமனே குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவை அதிகப்படுத்தி காட்டும் வேலையை மட்டுமே புரிகின்றது. ஆயினும் வேர்க்கடலை பட்டர், மற்றும் சீஸ் என்பனவற்றை உட்கொள்ளும்போது அவை உடலில் சேரப்பெறும் கலோரியின் அளவை அதிகப்படுத்தும்.கலோரியின் அளவு அதிகரித்த என்பது உடலை வலுப்பெற வைப்பது ஆகும். 

4. உடல் சூட்டை தணிக்க சூடான பதார்த்தங்களை உட்கொள்ளுங்கள்.

சூடான காலநிலை கொண்ட நாடுகளில் அதிகம் சூடான உணவுகளே உட்கொள்ளப்படுவது அறிந்ததே. இது வினோதமான செயல் என நாம் நினைத்திருப்போம்.எவ்வாறெனினும் ஆய்வின் படி பார்த்தோமேயானால் குளிர்ந்த பானங்கள் மற்றும் உணவுகளை விட சூடான பானங்கள் உடலை விரைவாக குளிர்மைப்படுத்த கூடியவை ஆகும்.சூடான உணவுகள் உள்ளெடுக்கப்படும்போது உடலில் உள்ளகழிவுகளானவை ஆவியாக்கப்பட்டு வியர்வையாக வெளியேற்றப்படுகின்றது. இதனால் உடல் குளிர்வடைந்து உடல் சுத்தமாக்கப்படுகின்றது.

5. உடல்வலிமை அதிகரிக்க தொடர்ந்தும் உடற்பயிற்சி அவசியம்.

ஒருநாள் உங்கள் வேலையை நீங்கள் சிரமப்பட்டு செய்து களைத்துப்போனால் அன்றையதினம் கண்டிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிப்பது உண்டு. இது முற்றிலும் தவறான செயலாகும்.சோர்ந்திருக்கும் உங்களை சுறுசுறுப்பாக்குவதற்காக கண்டிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமேயாகும். உடற்பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் சோர்ந்திருக்கும் செல்களில் உள்ள ஆக்சிஜனை அதிகரிக்க செய்யலாம். அவ்வாறே உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது தசைகளின் வலிமை வலுப்பெறவும் செய்கின்றது.

6. இதய நோயாளிகளுக்கு உதவிடும் "உறைநிலை" 

இதய நோயாளிகளின் சராசரி உடல்வெப்பநிலை 32' பாகை செல்ஸியஸ்ஸாக பராமரிக்கப்படவேண்டியது அவசியம். எனவே இதய நோய் தொடர்பில் அவர்களுக்கு வழங்கப்படும் ஒருவித சிகிச்சை முறையே செயற்கை முறையிலான உடல் வெப்பக்குறைப்பு சிகிச்சையான ஹைப்போதேர்மியா (hypothermia) ஆகும். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கான இந்த சிகிச்சை முறையில் குளிர்ந்த உப்புக்கறையால் அல்லதுபனிக்கட்டிகளை அவர்களுக்கு வைப்பதன் மூலம் இதயத்தை இயங்க செய்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
சாதாரண உடல் வெப்பநிலைமாற்றமடையும்போது உடற்செயற்பாடுகள் ஸ்தம்பிதமாகும். இதனால் உறைநிலை சிகிச்சைகள் மூலம் உயிராபத்துக்களில் வராமல் தடுப்பது அதிகமாக்கப்படுகின்றது.

7. கழிப்பறை மூடியை மூடிய பின்னர் நீர் வெளியேற்ற வேண்டும்.

 உபயோகித்தபிறகு நாம் தண்ணீர் ஊற்றும்போது கண்டிப்பாக அதன் மூடியை மூடியபின்னரே ஊற்ற வேண்டும். அவ்வாறே நீரை வெளியேற்றும் போதும் செய்யவேண்டும். வெளியேற்றப்படும்போது வெளியே சிதறும் நீரில் சில "டாய்லட் ப்ளூம்"(TOILET PLUME) என்றழைக்கப்படும் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் இவ்வகையாக காற்றிலும் நீரிலும் கலந்திருக்க வாய்ப்பிருப்பதாக அறியப்படுகின்றது. இதனால் கிருமி தொற்றுக்கள் அதிகமாக்க���்படும் வாய்ப்புக்கள் உண்டு .

Article By TamilFeed Media, Canada
3426 Visits

Share this article with your friends.

More Suggestions | Health