தூக்கத்தை தொலைக்காதீர்கள் 

இன்று சர்வதேச தூக்க தினம் 

இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு தூக்கம் என்பது எட்டா கனியாகும். கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தினை தொலைத்தது மட்டுமன்றி எப்போது நேரம் கிடைக்கும் என எதிர்பார்த்தவண்ணம் இருப்பதுவும் அறியப்படுகின்றது.

இவ்வாறு தூக்கத்தினை தொலைத்துவிட்டு அவதிப்படுபவர்கள் தமக்கான வேலைகளை அவசர அவசரமாக முடித்துவிட்டு தூங்க சென்றாலும் தூக்கம் என்பது வராமலேயே அவதிப்படுவதனையும் அவதானிக்க கூடியதாக உளது.

இதன் காரணமாக மறுநாள் காலை சீக்கரம் எழுந்திரிக்க முடியாமல், சோம்பல் ஏற்படும். பின்னர் அலுவலகம் சென்றாலும் மந்தமான நிலையிலேயே உடல் இருக்கும். மனமும் சோர்வடையும். தூக்கம் வரவில்லை என்ற வார்த்தைகளேயே இது போன்றவர்களிடம் அதிகம் கேட்கும் புலம்பலாக இந்த காலத்தில் உணரப்படுகின்றது .

இவ்வாறு தூக்கமின்றி அவதிப்படும் நிலையில் இருப்பவர்கள் எவ்வாறு இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரலாம் என பார்க்கலாம்

 

  • தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், நன்றாக குளித்து, ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். ‘டிவி’ மற்றும் கம்ப்யூட்டர்களை அணைத்துவிட வேண்டும் .

 

  • அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைக்க வேண்டும். பின்னர், அடுத்த நாள் வேலையை திட்டமிட வேண்டும். 

 

  • தியானம் மற்றும் கடவுள் பிரார்த்தனை என்பன மேற்கொள்ளலாம் படுக்கைக்கு செல்லும் முன்னர் மேற்கொள்ளலாம் மனதை அமைதிப்படுத்தி விட்டு தூங்கச் சென்றால், நன்றாக தூக்கம் வரும்.

 

  • இரவு உணவை சாப்பிட்ட உடனேயே தூங்க செல்லக்கூடாது. 60 முதல் 90 நிமிடங்கள் கழிந்த பின்னர் தூங்கச் சென்றால் தான் நன்றாக தூக்கம் வரும். இடைப்பட்ட நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சிறிது மனம் விட்டு பேசுங்கள். அன்றைய சுவாரஸ்சிய சம்பவங்களை பேசி மகிழுங்கள். இதனால் மனமும் ரிலாக்ஸாக இருக்கும். தூக்கமும் நன்றாக வரும்.

 

  • தூக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் 60 வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை ஒரு அறிவியலாளர் கண்டறிந்துள்ளார். விடியும்வரை தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுவதால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக 60 வினாடிகளில் எளிதாக உறங்க ‘4-7-8டெக்னிக்’ முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்சுறியல் நிபுணரான மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

  • இந்த பயிற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்தி வைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக் காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமாக நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

 

  • இந்த முறையினால் 7 வினாடிகள் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்து நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகிறது. இது உடலை தளர்வடையச் செய்கிறது. மேலும், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறிவிடுகிறது. இந்த முறையின் மூலம் வெளியேறும் தேவையற்ற எண்ணங்களால் நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என்று மருத்துவர் ஆண்ட்ரூவெய்ல் கூறியுள்ளார்.
Article By TamilFeed Media, Canada
1610 Visits

Share this article with your friends.

More Suggestions | Health