WOOD APPLE எனப்படும் விளாம்பழம் உடலுக்கு அளிக்கும் சக்திகள்

விளாங்காயில் உவர்ப்புத்தன்மையும் விளாம்பழத்தில் அமிலத்தன்மையும் இருக்கிறது இதில் வைட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், இலைகளும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

இதன் இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன. இதில் இரும்புசத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது, எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எலும்புகள் வலுவடையும்.

நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஒரு விளாம்பழத்தை சாப்பிடுங்கள், இதை தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை இருக்காது. மேலும் சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். பித்தத்தால் வரும் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.பித்தம் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.


இப்பழம் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதுடன் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை எவ்வித பிரச்சனையும் இன்றி இயங்க செய்வது, மேலும் இதயத்தை பாதுகாக்கும் , மனசந்தோஷத்தையும், மனதைரியத்தையும் அளிக்கும்.
முதியவர்களுக்கு ஒரு வயதை கடந்து விட்டால் பற்கள் கொட்டிப்போவது இயல்பு.ஆனால் விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல்லுக்கு உறுதி கிடைக்கும்

 

Article By TamilFeed Media, Canada
4023 Visits

Share this article with your friends.

More Suggestions | Health