தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

உடலியல் மற்றும் மனோவியல் ரீதியில் நீங்கள் அடையும் பலன்கள் இவைதான் 
தினமும் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 

எங்களின் வாழ்நாளில் சுமார் 4000 மணித்தியாலங்களை குளியலுக்கு செலவிடுகின்றோம். உடல்நிலை ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாக சுத்தமான குளியல் என்பது அத்தியாவசியம் ஆகின்றது.

தினமும் காலையில் குளிப்பது என்பது அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் இருக்க வழி வகுக்கின்றது. அவ்வாறே உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதன் மூலம் உங்களின் உற்சாக நிலை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

நல்ல குளியல் என்பது நோய்கள் பலவற்றினை உடலில் இருந்து விரட்டியடிக்க உதவுவது மட்டுமன்றி ஆரோக்கியமான நிலைக்கு உதவும் என்பதனை பல மருத்துவர்கள் உங்களுக்கு பரிந்துரைப்பதை அறிவீர்கள் அவ்வாறே எவ்வளவு நோய் வாய்ப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு குளியல் என்பது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுவதன் காரணமும் அவரது ஆரோக்கிய நிலையினை மேம்படுத்துவதற்கு ஆகும்.

தினசரி இரண்டு வேலைகளுக்கு குளிப்பது மட்டுமன்றி உங்களுக்கு தண்ணீரில் நீந்தும் பழக்கம் இருப்பது என்பது உங்களின் தேகம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் ஆகின்றது . சில தொழிலகங்களில் வேலைசெய்ப்பவர்களுக்கு வாரம் ஒருமுறை நீச்சல் பயிற்சி கட்டாயம் கற்று தரப்படுவதும், நீச்சல் சம்பத்தப்பட்ட துறைகளில் ஊக்கமும் அழிக்கப்படுவதன் நோக்கமும் இதுவாகும். தண்ணீரில் நீந்துதல் என்பது மற்றைய உடற்பயிற்சிகளைப்போன்றே மிகவும் சிறந்ததொரு விடயம் என ஆய்வாளர்கள் அறியத்தருகின்றனர். இதன் மூலம் உங்கள் தினசரி தொழில் முறையில் கூட மேம்பட்ட முன்னேற்றங்களை அடைந்துகொள்ளலாம் என அறியப்படுகின்றது. 

குளியல் என்பது வேறு எந்த வகையில் உடலுக்கும் மனத்துக்குமான உந்துதலை நிலைபெற செய்கின்றது என்பதனை காணலாம் 


மன அழுத்தத்தினை குறைக்கின்றது 

குளிர்ந்த நீரில் குளிப்பது அல்லது நீந்துவது என்பது எமது மனஅழுத்தத்தினை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. இது உடலின் புறசூழல் காரணிகளால் சேரும் அழுக்கு மற்றும் விஷத்தன்மை போன்றவற்றால் ஏற்படக்கூடிய மனரீதியிலான பாதிப்புக்களை அகற்றிட உதவுவதுடன் தெளிவான மனநிலையினை அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. 

நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடைய செய்கின்றது

தினசரி குளிப்பதன் காரணமாக குருதியில் உள்ள வெள்ளணுக்களின் உற்பத்தி அதிகரிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் அறியத்தந்துள்ளன. வெள்ளணுக்களின் அதிகரிப்பு உடல்வளர்ச்சி மற்றும் சக்திவலுக்களை அதிகப்படுத்துதல் போன்ற விடயங்களை அதிகரிக்க செய்கின்றது. எனவே எம்மை நோய்கள் இலகுவில் அண்டாது.

கொழுப்பினை கரைக்கும் திறனை கொண்டது.

எமது உடலில் குளிர்நிலை தூண்டப்படுவதால். உடலில் உள்ள மேலதிக கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் என்பன குறைவடைகின்றது. இதனால் உடலின் உஷ்ண நிலை கட்டுப்படுத்தப்படுவதுடன் உடல் பருமனை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.

நரம்பு மண்டலத்தினை சீர்படுத்துகிறது .

உடலின் நரம்பியல் மண்டலத்தில் beta-endorphin நிலையினை அதிகரித்து சீரான இரத்த ஓட்டத்தினை தூண்ட செய்கின்றது. இவ்வகையான சீரான இரத்த ஓட்டமே பெரும்பாலும் மன ரீதியான பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதனை அறியலாம்.

Article By TamilFeed Media, Canada
4055 Visits

Share this article with your friends.

More Suggestions | Health