பேரிக்காயின் சுகாதார நலன்கள்.

“PEARS” பெயார்ஸ் எனும் பழம் சிவப்பு, பச்சை மற்றும் பழுப்பு போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

இதில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன, இதனால் இது உடலுக்கு அதிக நலனை தருகின்றது.

இவற்றில் கொழுப்பு,பொட்டாஷியம் மற்றும் சோடியம், தாமிரம்,பாஸ்பரஸ்,கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,சர்க்கரை வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் B6 ,வைட்டமின் B2,வைட்டமின் C, வைட்டமின் E வைட்டமின் B12,மெக்னீசியம், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதன் சாறு தொடர்ந்து அருந்தினால் குடல் இயக்க நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன், இதிலுள்ள குளுக்கோஸ் உடலுக்கு அதிக ஆற்றலை தரும்.

மற்றும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர் வெறும் பேரிக்காய்ச் சாறு ஒரு முழு கிளாஸ் குடித்தால் காய்ச்சல் குறையும்.

இதில் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மற்றும் பல்வேறு அழற்சி நிலைமைகள், வலிகளை நீக்க உதவுகிறது.

இதில் ஃபோலிக் அமிலம் குறைந்த அளவில் இருப்பதால் அது நரம்பியல் குறைபாடு சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

இதிலுள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவுவதுடன் பெருங்குடல் சுகாதார பராமரிப்புக்கும், இரத்த சர்க்கரையின் அளவு நிலைத்திருக்கவும் உதவுகின்றது.

Article By TamilFeed Media, Canada
2976 Visits

Share this article with your friends.

More Suggestions | Health