இதில் முக்கியமாக நார்ச்சத்து, பாலிபினாலி்க் கலவைகள், ஆண்டியாக்ஸிடண்ட், வைட்டமின் A, விட்டமின் B மற்றும் Е, காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
இது புற்று நோய், மற்றும் பிற நோய்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது . இவை பொதுவாக பழங்கள்,மரக்கறிகளிலும் பார்க்க சோளம் போன்ற தானியங்களிலே அதிகம் நிறைந்துள்ளது.
இதனால் கிடைக்கும் நன்மைகள்
- அதிக உடல் எடைக்கு எதிராக போராடுகின்றது.
- இதய நோய்கள் தொடர்பான அபாயத்தை குறைக்கின்றது.
- இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சுதலை குறைக்கின்றது.
- நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
- மூல நோய் ஏற்படும் சாத்தியம் குறைக்கிறது
- எலும்புகளை வலிமையாக்கும் தன்மை கொண்டது.
- செரிமானச் செயல்முறையை கட்டுப்படுத்துகின்றது
- தோல் மற்றும் பார்வை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.