வெள்ளைப்பூண்டின் பலன்கள்.

வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டில் நீர்ச்சத்து, புரோட்டின், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, காபோவைதரெட் என்பன உள்ளது. மேலும் கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, விட்டமின் சி சிறிதளவும், விட்டமின் பி சத்துக்களும் உள்ளன. 

உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும் பூண்டு, இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் எல்லா வகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம். 

அத்தோடு பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும், ஒக்ஸிஜன் (Oxygen) தடையின்றி கிடைக்கின்றது. மேலும் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றையும் சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும்.

Article By TamilFeed Media, Canada
3930 Visits

Share this article with your friends.

More Suggestions | Health