பீட்ரூட் கிழங்கு இனிப்பானது, அதன் இலை கசப்பானது, இவை எமக்கு சிறப்பானது.

பீட்ரூட்டிலுள்ள நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைந்து, மென்மையான சதைப்பகுதிகளை சுருங்கி, விரியச் செய்கின்றன. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறது.

நாம் உண்ணும் கிழங்குகளில் பீட்ரூட்டின் பங்கு இன்றியமையாதது. இதன் கிழங்கு மற்றும் இலைகளில் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போரான், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், விட்டமின் சி மற்றும் ஏராளமான விட்டமின்களும், கனிமங்களும் காணப்படுகின்றன.இதிலுள்ள பீட்டைன் என்னும் ஆல்கலாய்டு இருதயத்தை பாதுகாப்பதுடன், போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி என்பன புரொஜஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் செயல்பாட்டிற்கும் பெருமளவு உதவுகின்றன.

பீட்ரூட் கிழங்கு இனிப்பு சுவையாக இருந்த போதிலும் இதன் இலை கசப்புத் தன்மையானவை இவற்றின் சாறானது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றனது. கல்லீரலின் கொழுப்பை கரைக்கின்றனது. மற்றும் சிறுநீரை நன்கு பெருக்கி, இதய வீக்கத்தை குறைக்கின்றனது. பீட்ரூட் கிழங்குகளைவிட இதன் இலைகள் ஏராளமான மருத்துவக் குணங்களை கொண்டுள்ளன.

செரிமான கோளாறுகளை நீக்கி, உணவுப்பாதையில் தோன்றிய அழுகல் மற்றும் கழிவுகளை நீக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு.

வாய் நாற்றத்தை நீக்கவும் பீட்ரூட் துண்டுகளை வாயில் போட்டு மென்று வரலாம்.

பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல் வலி நீங்கும். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

வாரம் ஒருமுறை பீட்ரூட் சூப் குடித்து வர இரத்த ஓட்டம் சீராகும், சிறுநீர் நன்கு பெருகும், ரத்த சோகையினால் பெண்களுக்கு தோன்றும் மாதவிலக்கு தடை நீங்கும், கல்லீரல் பித்தப்பையில் தோன்றும் கற்கள் மற்றும் மண்ணீரல் வீக்கம் நீங்கும், நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் காரட், முள்ளங்கி, பீட்ரூட், நூல்கோல், வெந்தயம், சீரகம், ஓமம், வெங்காயம், பூண்டு போன்றவற்றின் இலைப் பகுதிகளை உணவில் சூப் அல்லது அரைத்த விழுதாக சேர்த்து பயன்படுத்தலாம். ஏனெனில் கிழங்குகளில் இல்லாத சில உயிர்சத்துக்களும், கனிமங்களும், அத்தியாவசிய உப்புகளும், நார்சத்துகளும் இந்த இலைகளில் பெருமளவு உள்ளன.

Article By TamilFeed Media, Canada
2985 Visits

Share this article with your friends.

More Suggestions | Health