பண்டிகைகள், கொண்டாட்டங்கள் வரிசையில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு குதூகலமான மாதம் பெப்ரவரி ஆகும். மறைந்த பாதிரியார் வேலன்டைன் இன் நினைவாக சர்வதேசமெங்கும் காதலர் தினம் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த காலத்தினை பயன்படுத்தி பல ஜோடிகள் தம்மிடையே இருக்கும் அன்பையும் அன்னியோன்னியத்தையும் வெளிப்படுத்திக்கொள்வர்.பரிசுகள் பரிமாறிக்கொள்வதுடன் தமது துணையை மகிழ்ச்சிப்படுத்தவும் தவறுவதில்லை .
அன்பிற்கு வயது வரம்பு என்பது இல்லை .இளைய சமூகத்தினர் ஆயினும், வயது வந்தவர்கள் ஆயினும் அவரவர் துணையினை தேடிக்கொள்ளவும் இந்த தினத்தை உபயோகப்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.
குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னர் பெற்றோர் மற்றும் சகோதரர்கள், உற்றார் உறவினர்கள் தவிர்த்து நமது சொந்த விருப்பு வெறுப்புக்களை பகிர்ந்துகொள்ளவும் ,எமது துன்பத்தில் தோள்சாயவும் எமது மனம் தக்க துணியை தேட தவறுவதில்லை.அவ்வாறு ஆணுக்கு பெண்ணும்,பெண்ணுக்கு ஆணும் தேடிக்கொள்ளும் துணை காலங்கள் பல கடந்தும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே பலரதும் அவா.
இன்றைய காலத்தில் பலரது திருமண வாழ்க்கை நிலைத்து நிற்பது இல்லை . சிற்சில விடயங்களுக்காக பிரிந்து சென்ற பலரை சர்வ சாதாரணமாக நாம் காண்கின்றோம். நாம் நமக்கான துணையை தேடிக்கொள்ளும் முயற்சியில் பெரும்பாலும் தவறிழைத்து விடுகின்றோம்.
வாழ்க்கையின் முக்கிய பொறுப்பான நமக்கான உற்ற துணியை எவ்வாறு சரியான முறையில் தேடிக்கொள்வது என்பதில் எல்லோருக்கும் பாரிய குழப்பநிலை ஏற்படுவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அல்லற்படாமல் தமக்கான தக்க துணையை இலகுவில் தேடிக்கொள்ள சில அறிவுரைகள்
- ஏற்புடைய தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள்
முதலில் நீங்கள் தேடும் துணை எவ்வகையானவர் என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவான சிந்தனை இருத்தல் அவசியம், எவ்வகை இயல்புடைய குணம் மற்றும் பழக்கமுடையவரை நீங்கள் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள் ஏற்பதில் உங்களின் சொந்த விருப்பு வெறுப்புக்களும் உள்ளடங்கி இருக்கும். சிறுவயது முதல் நம் வாழ்ந்த சமூகம், சூழலுக்கு ஏற்புடையவர்களாகவும், நாம் பின்பற்றிவந்த கலாச்சார விழுமியங்களில் ஏற்புடையவராகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆளுமை , தோற்றம் என்பனவும் இதன்போது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது சாலச்சிறந்தது.
- பொது இடங்களில் சஞ்சாரித்துக்கொள்ள தவறாதீர்கள்
நமது துணையை எங்கே, எப்படி, எவ்வாறு சந்திப்போம் என்பது யாருக்கும் தெரியாது.நம்மில் பலர் சற்றும் எதிர்பாராத சந்திப்பில் தாம் தமது துணையை கண்டறிந்தும் இருப்பது அறிந்திருப்போம்.நாம் ஒரு குறிப்பிட்ட சூழலை மட்டும் சார்ந்து ஒரே இடத்தில் இருந்து வெளியிடங்களுக்கு போகாமல் இருப்பது கூட நம்மனதை பலமிழக்க செய்யும் என உளவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர். எனவே வெளி இடங்களுக்கு செல்வதன் மூலம் நாம் புதிதாக சந்திக்கும் பலருடன் நல்ல தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் . துணை தேடும் படலத்திற்கு மட்டுமல்ல எமது வாழ்வியலை முன்னேற்றவும் உதவிடும்.
- புதிய உறவினை வரவேற்க தயாராகுங்கள்.
ஒரு சிலர் இதுவரை காலமும் தனித்தே செயல்பட்டு வந்திருப்பார்கள் .பிறருடன் பேசவோ பழகவோ முடியாத நிலை கூட இருந்திருக்கும், பலருக்கு பிறருடன் எப்படி பேசுவது என்பதில் கூட தயக்கம் இருக்கும், இதற்கு நீங்கள் இதுவரை இருந்துவந்த சூழ்நிலை இதற்கு இடமளித்திருக்காது. இவை அனைத்தையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு புதிய முயற்சியாக புதுப்புது உறவுகளை உங்களின் வாழ்க்கைக்குள் அனுமதியுங்கள்,அவ்வாறே உங்களின் பழைய உறவினர்களுடன் கூட நீங்கள் பேசாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு எனின் அவற்றை புதுப்பிக்கும் வகையில் மீண்டும் அவர்ளுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள தயங்கிட வேண்டாம்.
- ஒரே நிலையில் இருக்க வேண்டாம்
இதுவரை நீங்கள் காலை முதல் மாலை வரை ஒரே மனநிலையில் தினசரி செய்யும் அதே வேலைகளை திருப்பி, திருப்பி செய்துகொள்வது உங்களுக்கே சலிப்பாக இருக்காதா? உங்களின் செயல்களில் சிற்சில மாற்றங்களை கொண்டு வர தவறாதீர்கள். அருகில் இருப்பவர்களுடன் பேசிப்பழகுங்கள். இவ்வாறே பிறர் பற்றிய நேர்மையான கருத்துக்களை, அவரைப்பற்றிய உண்மையான விடயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள் . உங்களின் நேர்மைத்தன்மையும் உங்களின் துவை தேடிட வித்தாக அமையும்,அவ்வாறே உங்களின் நல்ல குணங்களை பிரதிபலிக்கும் வகையில் நடந்துகொள்வதை கைவிட வேண்டாம்
முடிவாக, உங்களின் குறைகளை கூட நேசிக்கும் ஒருவரை உங்களின் துணையாக ஏற்றுக்கொள்ள மறுக்காதீர்கள். அவ்வாறே நீங்கள் யாருடன் பழகும்போது மிகவும் இயல்பாகவும் , எதுவித நெருடல் இல்லாமல் பழகுகின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் உங்களின் சாதாரண இயல்புகளை ஒத்தவாறாக இருப்பார்கள் சிலர் அவர்களுடன் உங்களின் நெருக்கம் அதிகமாகும். துணை தேடும் படலத்தில் அன்பு என்ற மந்திர யுக்தியை கையாண்டு கொள்ளுங்கள் . "உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி" என்கிறார் இயேசு கிறிஸ்து. உங்கள் வாழ்க்கை பயணத்தில் தொடரப்போகும் உங்களின் துணைக்காக அன்பை வாரி வழங்கிட தயக்கம் தேவையா? .