உங்கள் யோசனைகளுடன் ஆலோசகர்களின் பேச்சையும் கேளுங்கள் 

எந்தவிடயத்திலும் ஒரு ஆலோசகரின் அறிவுரையை பெற்றுக்கொள்வதில் உள்ள நன்மைகள் இதோ 
உங்கள் யோசனைகளுடன் ஆலோசகர்களின் பேச்சையும் கேளுங்கள் 

நீங்கள் என்னதான் பலதுறைகளில் தேர்ச்சி பெற்று இருந்தாலும், உங்களுக்கு அனுபவமும் திறைமையிம் அதிகமாக இருந்தாலும் இன்னொருவரின் ஆலோசனைகளை கேட்க தவறாதீர்கள்.

பொதுவாக ஆலோசகர்களின் கருத்து உங்கள் முடிவுகளை கூட திசை திருப்பிவிட வாய்ப்புக்கள் உண்டு என நீங்கள் அச்சப்படலாம். ஆயினும் அவ்வகை முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நன்மைகளை உங்களுக்கு பெற்றுத்தரும் வாய்ப்புக்கள் உண்டு என அறிவீர்களா?

ஒரு நல்ல ஆலோசகர் என்பவரை நாம் சாதாரண மனிதராக எடை போட்டு விட முடியாது. எமது மரியாதைக்குரிய நபராகவே அந்த ஆலோசகர் காணப்படுவார். துறை சார் ஆலோசகராக ஒருவர் இருக்கிறார் என்றால், அவருக்கு அனுபவமும், திறைமைகளும் அதிகபட்சமாகவே இருக்கும். என்னதான் நமது திறமைகளும் முன் அனுபவங்களும் கொண்டு நாம் தொழில் ரீதியிலும், வாழ்க்கையிலும் எடுக்கப்போகும் முடிவுகள் பல இடங்களில் சரிவு நிலைக்கே நம்மை தள்ளிவிடும் . ஆயினும் இன்னொரு நபரின் ஆலோசனைகளை ஏதேனும் சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்வது கண்டிப்பாக நமக்கு உதவிக்கரம் நீட்டும் என்பதை மறந்துவிட கூடாது.

தினசரி நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை சமாளிக்கவும், எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகளை இலகுவாக வெற்றிக்காகவும் கண்டிப்பாக அனுபவமிக்க நபரின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது விரும்பத்தக்கது. இது எந்தவகையிலேனும் நமது வெற்றியை உறுதிசெய்வதாகவே இருக்கும்.

உதாரணமாக தற்காலத்தில் வணிகசூழலை பொறுத்த வகையில் கிரிப்டோகரன்சி எனப்படும் பிட் கொயின்கள் பிரபலமடைந்துவருகின்றன. ஆனாலும் முன் அனுபவம் இன்றி இதனில் பலரும் முதலீடு செய்வதற்கு அச்சப்படுவதை அவதானிக்க கூடியதாகவே இருக்கின்றது. இதற்கான காரணம் முன்னனுபவம் இன்மையும், நட்டப்படுவோம் என்ற அச்சமும் ஆகும். இதற்க்கு முதலீட்டு ஆலோசகரின் அறிவுரைகளுடன் உங்கள் முதலீட்டிற்கு கிரிப்டோகரன்சியை முதலீடு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக நல்ல இலாப வருமானம் உழைத்து உங்கள் முதலீட்டு துறையில் வெற்றிபெறலாம் என நீங்கள் தெளிவுபெறவேண்டியது அவசியம். 

  • ஆலோசகர்களின் அறிவுரைகள் உங்களுக்கு உதவும்?

ஒரு நல்ல ஆலோசகரின் அறிவுரை பின்வரும் காரணிகளால் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் .


1. உங்கள் யோசனைகளை பரிசீலனை செய்ய உதவிடும்.

2. உங்கள் தொழில் சார் செயல்திட்டங்களை வரையறை செய்திட பெரும் உதவியாக இருக்கும்.

3. உங்கள் தொழில் கட்டமைப்பினை சீர்செய்ய உதவியாக இருக்கும்.

4. நிதி மற்றும் அனைத்துவித திட்டமிடலுக்கும் உதவியாக இருக்கும்.

5. சட்ட ரீதியான இணக்கப்பாடுகளுக்கு வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.

6. வெளித் தொடர்புகளை சரியாக பேணுவதற்கு உதவும்.

7. தொழில் ரீதியிலும், தர மேம்படுத்தலுக்கும் வரைபு ரீதியிலான யுக்திகளை பெற்றுத்தர வழிவகுக்கும்.

  • நல்ல ஆலோசகரை இனம்காணுவது எப்படி?

ஒரு நல்ல ஆலோசகரின் அறிவுரைகளை பெறுவதற்கு நாம் சில முன்னேற்பாடான வேலைகளை செய்து, அறிந்து இருப்பது அவசியமாகின்றது. நாம் தேர்வு செய்யும் ஆலோசகர் சரியானவரா? அல்லது தவறானவரா என்பதில் முதலில் நமக்கு அவதானம் இருக்க வேண்டியது முக்கியத்துவமான காரணி. 


நீங்கள் உங்கள் தொழில் ரீதியில் ஒருவரின் ஆலோசனைகளை பெறவிரும்பி அவரை உங்கள் உத்தியோகபூர்வ ஆலோசகராக நியமிக்கும் பட்சத்தில் அவரது ஆலோசனைகள் உங்களுக்கு தோல்வி நிலையினை ஏற்படுத்தி கொடுக்குமேயானால் உங்களை சூழ உள்ளவர்களின் அதிருப்தியும், கோபமும் உங்கள் மீதே திரும்பும் என்பதனை நீங்கள் உணர வேண்டும். எனவே அதனை முகாமை செய்துகொள்வது உங்களின் கைகளிலேயே உள்ளது .

பொதுவாக ஆலோசகர் என்பவர் உங்களின் நம்பிக்கையை வென்ற நபராகவே இருப்பார். நம்பிக்கை என்பதுவே அனைத்துவித செயற்பாடுகளுக்குமான அடித்தளமாக கருதப்படுகின்றது. எனவே நீங்கள் நம்பத்தகுந்தவர் உங்களின் முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக உதவிபுரிவார் என்ற ரீதியில் நீங்கள் செயற்படுவது நல்லது எனினும் அதற்கான தகுந்த நபரை தேர்வு செய்வதில் உங்கள் திறமை இருக்கின்றது. உங்கள் தொழில் ரகசியங்களை அறிந்தபின்னர் உங்களின் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ஆலோசகர் நடந்துகொண்டால் உங்களின் தோல்வியை அவரே உறுதிசெய்தும் விடுவார்.

ஆலோசகர்கள் அனைத்து விடயங்களிலும் அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். புதிதாக நீங்கள் ஏதேனும் விடயம் பற்றி பேசும்போது அந்த விடயத்தை பற்றிய ஏதேனும் உள் விடயங்களை கண்டிப்பாக அவர் அறிந்து வைத்துதான் இருக்க வேண்டும். அல்லது அது பற்றிய தேடலை பலகோணங்களில் அவர் ஆய்வு செய்ப்பவராக இருக்க வேண்டியது அவசியம். நிதி நிறுவனங்களில் இவ்வகை ஆலோசகர்கள் பெரிதும் விரும்பப்படுகிறார்கள்.

  • நல்ல ஆலோசகர்களை எங்கு இனம் காணுவது?

தொழில் ரீதியிலும், வாழ்கைத்தர முன்னேற்றத்திற்கும் ஆலோசகரை நீங்கள் அணுகவேண்டும் என முடிவு செய்தபின்னர். அது தொடர்பான தேடல் முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் வலையமைப்பின் மூலம் உங்களுக்கு தெரிந்த நபரோ அல்லது உங்கள் நண்பர்களுக்கு அறிந்த நபராகவோ அவர் இருக்கலாம். அவ்வகை ஆலோசகரை நீங்கள் முதலில் அறிந்துகொண்டு பின்னர் அவரிடம் அறிவுரைகளை பெறுவது நல்லது.


உங்கள் முன்னேற்ற பாதையை தீர்மானிக்க பல்வேறு காரணிகள் உள்ள போதிலும் சிறந்த ஆலோசகரின் வழிநடத்தலுடன் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பயனுள்ளதாகவே இருக்கப்போகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. எவ்வாறாயினும் ஆலோசகர்களின் பேச்சைக்கேட்பது வெற்றியைமட்டுமே தரும் என்பதற்கு இல்லை. தோல்விகள் உங்களுக்கு ஏற்படுத்திவிடினும் உங்களுக்கு நல்ல அனுபவத்தினை பெற்றுத்தரும், வாழ்க்கை மற்றும் தொழில் மேம்படுத்தலுக்காகவும் சிறந்த ஆலோசகரின் அறிவுரையினை பெறுவது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்பது உறுதி.

Article By TamilFeed Media, Canada
2160 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle