பரீட்சை பயம் நீங்க ஆலோசனைகள் 

தேர்வு குறித்து நமக்கு வரும் பயமே அதில் தோல்வியடையவும் செய்யும்.

சிறு பிள்ளைகள் ஆகட்டும், வயது வந்தவர்கள் ஆகட்டும் பரீட்சை, தேர்வு என்ற வார்த்தையை கேட்டதுமே மனதில் தானாகவே பயம் ஒன்று குடிகொண்டுவிடுவதை நாம் இயல்பாகவே கொண்டுள்ளோம். பள்ளிக்காலத்திலும் சரி, வேலைகளிலும் சரி , நாம் ஏதேனும் ஒரு விடயத்தை புதிதாக செய்ய முற்பட்டாலோ அல்லது போட்டி தேர்வு ரீதியில் அதனை முகம்கொடுக்க நினைத்தாலோ நமக்கு பதற்ற நிலையும் பயமும் தொற்றிக்கொள்ளும்.

இவ்வகையான அசாதாரண மன நிலையே நமது தோல்வி நிலைக்கு வித்தாக அமைந்து விடுகின்றது.இவ்வாறான தோல்வி பயங்களில் இருந்து விடுபட்டு தைரியமாக எவ்வாறு தேர்வு மற்றும் போட்டிகளில் முகம் கொடுக்கலாம் என பார்க்கலாம் .

 1. தைரியமாக முகம் கொடுங்கள். 

பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரதான பிரச்சினையே எந்தவொரு விடயத்தையும் ஆரம்பிக்கும் முதல் எப்படி ஆரம்பிப்பது, மற்றும் தோல்வியை எதிர்கொண்டு விடுவோமோ என்ற பயம் தான். முயற்சி செய்து பார்க்காமலேயே தோல்வியை எதிர்கொள்ளும் பயமே பல தோல்விகளுக்கான முதல் படி . 

இவ்வகை பயத்தினை போக்க முதலில் அந்த தேர்வினை எதிர்கொள்ளுங்கள்.தோல்வியும் வெற்றியும் நாம் தீர்மானிப்பது அல்ல.எது எவ்வாறாயினும் முதலில் அதனை முகம் கொடுத்து பாருங்கள் எதிர்கொள்வதில் உள்ள பயமே பலருக்கு அதிகம்.எனவே முதலில் துணிந்து முகம் கொடுக்க மறக்கவேண்டாம் 

2. கவனச்சிதறல் விடயங்களை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் . 

ஒரு விடயத்தை ஆரம்பித்து செயும்போது நமது முழு கவனமும் ஒருமித்ததாக அந்த விடயத்திலேயே இருத்தல் அவசியமாகும். ஏதேனும் வகையில் நமது கவனம் சிதறடிக்கப்படும் போது நாம் செய்யும் முழு விடயமுமே தோல்வி நிலையினை எட்டிவிடும்.

புற சூழல் காரணிகளாகட்டும், மனிதர்களாகட்டும் நமது கவனத்தை சிதறடிக்க பல ரூபங்களில் நம்மை தொடர்ந்து வருவது காணக்கூடியதாகவே இருக்கும். இதனை கண்டறிந்து அவற்றின் மூலம் நமது கவனத்தை சிதறவிடாமல் செய்வதிலேயே நமது சாமர்த்தியம் உள்ளது.

3. ஒப்பீட்டுத்தன்மையை தவிருங்கள்.


ஒப்பீடு செய்யும் வழக்கமானது நமது தோல்விக்கான காரணிகளில் ஒன்றாகும். நாம் தனித்துவமானவர்கள், எமக்கென்ற தனிப்பட்ட திறமை உள்ளது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தனித்துவப்பண்புகள் உண்டு . ஒருவருக்கு ஒருவர் அது கட்டாயமாக வேறுபாடும்.எனவே பிறருடன் நமது திறைமைகளையோ , செயல்களையோ ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்த்தால் மிகவும் நன்மை பயக்கும்.

4. தோல்வி நிலையானது அல்ல 

ஒரு விடயத்தில் நமக்கு ஏற்படும் சிறு சறுக்கல் நிலையே தோல்வி . அது ஒட்டுமொத்தமான வாழ்க்கையின் தோல்வி அல்ல . சறுக்கும் போது மீண்டும் எழும்பி நடந்து செல்வதை போன்றே நாம் நினைக்க வேண்டும். முயற்சி எடுப்பதில் பின்னடைவு இருக்க கூடாது.


5.மனநிலையை இலகுபடுத்தி கொள்ளுங்கள்.

எமது மன நிலையானது எப்போதுமே ஒரு அழுத்த நிலையினை கொண்டிருப்பதால் பல்வறுபட்ட சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைக்கூட நாம் சந்திக்க நேரும் .தியானம் போன்ற பயிற்சிகளானவை நமது மனதை இலகுவாகவும் லேசானதாகவும் மாற்றும். இது தோல்வி நிலையினையே மாறிட செய்யும் வல்லமையை கொண்டது.


6. இலக்கை அடைவது தொடர்பில் திட்டமிடுங்கள் 

தேர்வு நிலையினை அது தொடர்பில் திட்டமிடுவது நல்லது. எவ்வாறு தேர்வினை எதிர்கொள்வது? , தேர்வின்போது கேட்கப்படும் கேள்விகள் என்ன?, அவற்றை எவ்வாறு அணுகுவது? அவற்றிற்கு எவ்வாறு பதிலளிப்பது போன்ற விடயங்களை முன் கூட்டியே திட்டமிட்டு, தம்மை தயார்படுத்திக்கொள்வதன் மூலம் தேர்வு பயத்தில் இருந்து விடுபடலாம்.


ஒரு விடயத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ,எம்மை வீழ்த்த நினைக்கும் மன அழுத்த காரணிகளைக்கொண்டே நாம் முன்னேறும்போது வெற்றி என்பது நமக்கு நிச்சயமானதாகவே அமையும் என்பதில் சந்தேகமே இல்லை 

Article By TamilFeed Media, Canada
5398 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle