விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் ஒருமித்த நம்பிக்கை நம் பூமியை சுற்றியுள்ள ஆகும். ஆண்டுகாலங்களுக்கு முதல் மத நம்பிக்கையாக பின்பற்றப்பட்ட விடயம் காலப்போக்கில் நிஜமாக்கப்பட்டமை நமது பழமை பண்பாட்டின் தனித்துவத்தினை பறைசாற்றும் விடயமாக கருதப்பட்டு வருகின்றது.
பூமியை சுற்றி கோள்கள் இயங்குவதாக கருதி ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அவற்றினை தெய்வங்களாக கருதி வழிபடும் பழக்கம் நம் தமிழரின் மரபிலே ஓட்டிவந்த செயலாக இருந்து வந்தது. அதன் பிற்பகுதியில் விஞ்ஞான ஆய்வுகள் வளர்ச்சியடையாத தொடங்கிய காலகட்டத்தில் மெஞ்ஞானம் என்பது மெய் ஞானமே என்று பறை சாற்றும் வகையில் அறிஞர் கோப்பணிகஸ்ஸால் சூரியன் என்ற பெரு நட்சத்திரத்தை சுற்றி பூமி உட்பட கோள்கள் வலம் வருவதாக வானியல் ஆய்வு கூறுவதை தெளிவுபடுத்த, ஏவுகணைகளும் வின் கப்பல்களும் அதனை படம்பிடித்து காட்டி உண்மை என நிரூபித்தன.
எவ்வாறாயினும் பண்டைய தமிழர் பாரம்பரிய முறையில் வழிபாட்டு முறையாக இந்த 9 கோள்களும் சூரியனை வலம் வருவதாகவும் அது மனித வாழ்வியலை ஆதிக்கம் செலுத்துவது எனவும் கருதப்பட்டு அந்த 9 கோள்களுக்குமான சிறப்பு வழிபாட்டு தலங்களை மைக்கை அமைத்து தமது நம்பிக்கையை முன்னெடுத்து வந்துள்ளனர்.
அவ்வகையாக 9 கோள்களுக்குமான வழிபாட்டு தளங்கள் என்னென்ன மற்றும் அது எங்கு அமைந்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.
குறிப்பாக இந்த 9 வழிபாட்டு தளங்களும் தென் இந்தியா, தமிழ்நாடு கும்பகோணம் என்ற பிரதேசத்தை அண்டியே இருப்பது அறியப்படுகின்றது.
1. சூரியன் - ஆடுதுறை சூரியனார் கோவில்
கிமு1100-ஆண்டளவில் முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையிலிருந்து 21 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டுள்ள வழிபாட்டு தெய்வம் சூரியனார் ஆரோக்கியம்,வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர ஓளி வழங்கும் சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது.
இறைவன் : சூரியன்
தல விருட்சம்;எருக்கு
நிறம் : சிவப்பு
வச்திரம்: சிவப்புத் துணி
மலர்: தாமரை மற்றும் எருக்கு
இரத்தினம்: ரூபி
தான்யம் : கோதுமை
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை.
2. திங்கள் - திங்களூர் கைலாசநாதர் கோவில்
இக்கோவில் கி.மு 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
சந்திரகடவுளுக்காக அமைக்கப்பட்ட இக்கோவிலுக்கு சென்று வருவதால் நீண்ட ஆயுளும்,
சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறும்.ஜோதிட சாஸ்திரப்படி,சந்திரனார் துன்பங்களையும்,
துயர்களையும் துடைக்கவல்லவர் என்று கூறுவது வழக்கம்.
இறைவன்: கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
சந்திரனின் நிறம் : வெண்மை
வச்திரம்: வெள்ளைத்துணி
தான்யம்; நெல்
உணவு: தயிர் சாதம்
மலர்: வெள்ளை அரளி
தீர்த்தம் : சந்திராபுஷ்க்காரணி
3. செவ்வாய் - சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் நாயன்மார்களால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.
இந்த கோவிலில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடவுளுக்கு தனி சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது .இக்கடவுளை வணங்குபவருக்கு தைரியம்,வெற்றி பலம் ஆகியவை கிட்டும் என நம்ப்படுகிறது.இக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் பக்தர்கள் ' சித்தமிருத்தா' குளத்திற்குச் சென்று தங்களை தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தண்ணீருக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை சுகப்படுத்தும் தன்மை உண்டு என்றும் நம்பப்படுகிறது.
மூலவர்: வைத்தியநாதர்
தாயார்: தையல்நாயகி
தல விருட்சம்: வேம்பு
தீர்த்தம்: சித்தாமிர்தம்
ஆகமம்: காமிக ஆகமம்
4. புதன் - திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்.
சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்மையான நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மூலவர்: சுவேதாரண்யேஸ்வரர்
தாயார்: பிரமவித்யாம்பிகை
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்).
5. குரு (வியாழன்) - ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்.
இந்த திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்மையான நம்பிக்கை ஆகும். இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.
மூலவர்: ஆபத்சகாயேசுவரர் , காசி ஆரண்யேசுவரர்
தாயார்: ஏலவார் குழலி
தல விருட்சம்: பூளைச் செடி
தீர்த்தம்: அமிர்த புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்.
6. சுக்கிரன் - கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்.
இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 36வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.
இறைவன்: அக்னீச்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
விருட்சம்: புரச மரம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
பதிகம்: அப்பர்
நவக் கிரகத் தலம்: சுக்ரன்.
7. சனி - திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும்.
இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.
மூலவர்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
தாயார்: பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
தல விருட்சம்: தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள்
சிறப்பு திருவிழாக்கள்: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
8. ராகு - திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.
மூலவர்: நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
தாயார்: 1.பிறையணிநுதலாள், 2.கிரிகுஜாம்பிகை
தல விருட்சம்: சண்பகம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்.
9. கேது -கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்.
இந்த தளம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கேது. இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைப்பர்.நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
மூலவர்: நாகநாதர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
தாயார்: சவுந்தர்யநாயகி
தல விருட்சம்: மூங்கில்
தீர்த்தம்: நாகதீர்த்தம்
ஆகமம்: காமிகம்.