கட்டாயம் காணவேண்டிய தங்க முக்கோணம். 

வரலாற்று சிறப்புக்களை கூறும் வட இந்திய சுற்றுலா தளங்கள்.

இந்த உலகில் நாம் காணவேண்டிய பல்லாயிரக்கணக்கான இடங்கள் பரவிக்கி கிடக்கின்றன. இருந்த போதிலும் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் வரலாற்று ரீதியாகவும், அழகிய தோற்றத்திற்காகவும் எம் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது அறிந்ததே.

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் அதன் தொண்மையையும், வரலாற்றையும் பிரதிபலிப்பதாக பல்வேறுபட்ட இடங்கள் காணப்படும். அதில் குறிப்பிடும்படியான ஓரிரு இடங்களை கண்டிப்பாக சுற்றுலாவாசிகள் காணவேண்டும் என நினைத்து வைத்திருப்பர்.

அந்த வகையில் பழமையை இன்னும் பேணிவரும் நாடான இந்தியாவின் வடமாநிலத்தில் அமைந்துள்ள தங்க முக்கோணம் என்று அழைக்கப்படும் 3 முக்கிய நகரங்களான டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா ஆகிய இடங்களின் சிறப்புக்கள் யாவை என காணலாம்.

தங்க முக்கோணம் .

இந்தியாவின் வடமாநிலத்தின் 3 முக்கிய நகரையும் இணைப்பதால் இந்த நகர்களின் சுற்றுசூழல் தங்க முக்கோணம் என்றழைக்கப்படும் இதன் சுற்றுபாதையில் முக்கிய அரண்மனைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என பல்வேறு ஸ்தலங்கள் அமையப்பெற்றுள்ளன. இந்த பயணப்பாதையானது சுமார் 720மீற்றர் சுற்றுப்பாதையை கொண்டுள்ள அதே நேரம், ஒவ்வொரு சுற்றுலாத் தளத்திற்கும் இடையேயான தூரமானது 4 முதல் 6 மணித்தியாளமாக கருதப்படுகின்றது.

இந்த இடங்களை கண்டுகளிப்பதற்கு அப்பிரதேசத்தில் சிறப்பு போக்குவரத்து வாகனமான சதாப்தி விரைவு வண்டி பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் முழுமையாக தங்க முக்கோண பிரதேசத்தின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

ஜெய்ப்பூர் 

இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் இந்த ஜெய்ப்பூர் . இதற்க்கு சிகப்பு நகரம் என்ற புனைப்பெயரும் உண்டு. இது டெல்லியில் இருந்து 288 கிமீ தொலைவிலும், மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும், அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள நகரமாகும்.

ஜெய்ப்பூரில் சுற்றுலாத்தலங்கள் சில 

ஆம்பர் கோட்டை - 

ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலாதலமாகும்.

ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்டுள்ள பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோட்டையில் பல அரண்மனைகளும், ஒரு எரியும் காணப்படுகின்றது. இங்கு காணப்படும் ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளதாக அறியப்படுகின்றது.

இந்தக்கோட்டையானது மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்டது. இதில் காணப்படும் நான்கு அரண்மனைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை ஆகும் . ஒன்று திவானி ஆம். இது பொதுமக்கள் கூடும் மாளிகை ஆகும். மற்றையது திவானி காஸ் என்றழைக்கப்படும் அரசகுடும்பத்தினர் மட்டும் கூடும் அரண்மனை ஆகும். அத்துடன் கண்ணாடி மாளிகை என்றழைக்கப்படும் ஜெய் மந்திர மற்றும் செயற்கை நீரூற்றுடன் கூடிய இன்னுமொரு மாளிகை என மொத்தமாக 4 அரண்மையையும் கொண்டிருப்பதால் இந்த கோட்டையை "ஆம்பர்" கோட்டை என அழைப்பார்களாம்.

ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையின் கணபதி நுழைவாயில் அருகில் உள்ள சிலா தேவியின் உருவச்சிலை, தற்கால வங்காள தேசத்தின் ஜெஸ்சூர் இராஜாவை, 1604இல் இராஜா மான் சிங் வெற்றி கொண்டமைக்காக வழங்கப்பட்டது என வராலாற்று நிகழ்வுகள் அறியப்படுகின்றன.

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஆம்பர் கோட்டையும், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாகர்கர் கோட்டை - 

இது ஆரவல்லி மலைத்தொடரின் முனையில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இதன் அருகிலேயே ஆம்பர் கோட்டையும் , ஜனகர் கோட்டையும் அமையப்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.ஜெய்ப்பூரில் மன்னர் நாகர்சிங் பொமிய என்பவரால் இக்கோட்டைக்கு நாகர்கர் என பெயர் வந்ததாக வரலாற்று தரவுகள் குறிப்பிடுகின்றன.

ஜெய்ப்பூர் நகரத்தை நிறுவிய மன்னர் சவாய் இரண்டாம் ஜெய்சிங் என்பவர், மராத்தியப் படைகளையும், ஆங்கிலக் கம்பெனிப் படைகளை எதிர்கொள்ளவும், கிபி 1734ல் நாகர்கர் கோட்டை நிறுவப்பட்டது . 

1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குடும்பங்கள் இக்கோட்டையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

1868ல் நாகர்கர் கோட்டை விரிவு படுத்தப்பட்டது. 1883-92ல் நாகர்கர் கோட்டையில் மூன்றை இலட்சம் ரூபாய் செலவில் அரண்மனைகள் கட்டப்பட்டது என வரலாற்று தகவல்கள் அறியப்படுகின்றன.

ஜெய்ப்பூர் மன்னர் சவாய் மதோ சிங், அரண்மனை குடும்பத்தினர்களுக்காக, கோட்டையில் பல அறைகளுடன் கூடிய அரண்மனையை கட்டியுள்ளதாக மேலும் அறியப்படுகின்றது.

ஜெய்கர் கோட்டை -

இராசபுத்திர குலத்தவரான மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்பவர் தனது போர் வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனையை, 1726ல் கட்டத்துவங்கினார்.

ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் கட்டப்பட்ட ஜெய்கர் கோட்டையை வெற்றிக் கோட்டை என்றும் அழைப்பர். இக்கோட்டை, வடக்கு - தெற்கில் 3 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு - மேற்கில் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கோட்டையின் சுவர்களை எதிரிகள் இடிக்க முடியாத அளவிற்கு உறுதி கொண்டது.

இக்கோட்டையின் மேல் உள்ள பீரங்கி, உலகின் பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும். 

ஜெய்கர் அரண்மனை வளாகத்தில் லெட்சுமி விலாஸ், லலிதா கோயில், விலாஸ் கோயில் மற்றும் ஆரம் கோயில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது.இதன் இன்னுமொரு சிறப்பானது ஆம்பர் கோட்டையும், ஜெய்கர் கோட்டையும், பூமிக்கடியில் உள்ள சுரங்கப்பாதை மூலம் ஜெய்கர் கோட்டையில் இணைக்கிறது

ஜெய்ப்பூர் நகர அரண்மனை - 

இந்த நகர அரண்மனையின் வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகள் காணப்படுகின்றன. இவ்வரண்மனையின் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடமாகும். ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மகால் தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் நகரத்தின் வடகிழக்கில் அமைந்த ஜெய்ப்பூர் அரண்மனை பெரும் தாழ்வாரங்களையும், தோட்டங்களையும், கட்டிடங்களையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அரண்மனை சுவர்களிலும், கூரைகளிலும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகள் கொண்டு அலங்கரிப்பட்டுள்ளது.

இவ்வரன்மனை 1729 - 1732 கால கட்டங்களில், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய் சிங் காலத்தில், ராஜ்புத், மேலைச் சாளுக்கியர், பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது என அறியப்படுகின்றது.

டெல்லி 

11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது டெல்லி. இது இந்திய மத்திய (நடுவண்) அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது என அறியப்படுகின்றது.

வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது ஆகும்.

டெல்லியின் சுற்றுலாத்தலங்கள் சில 

குதூப் மினார் - 

72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட நினைவுத் தூபியே இதுவாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசரான குத்துப்புத்தின் ஐபக் ஆணையிட்ட படி, இந்த தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இந்த தூபியின் மிகவும் உயரத்திலான தளம் 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் புராதனமான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.

இது பிற பல்வேறுபட்ட புராதன, இடைக்கால கட்டமைப்புகள் மற்றும் இடிபாடுகளால் சூழ்ந்திருப்பதால், குதுப் பல்கூட்டுத் தொகுதி-வளாகம் என்று அறியப்படுகிறது. இந்த வளாகம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளம் என வழங்கப்படுவதாகும். தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது. மேலும் 2006 ஆம் ஆண்டில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்த தளமாகும். அந்த ஆண்டில் 3.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் குதூப் மினாரை கண்டு களித்தனர், மேலும் தாஜ் மகாளைப் பார்க்க குறைவாக சுமார் 2.5 மில்லயன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை -

மதில்சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது இந்த செங்கோட்டை , மேலும் இது 2007ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையானது டெல்லி கோட்டை , லால் குயிலாஹ் , அல்லது லால் குயிலா எனறும் அழைக்கப்படுகிறது.

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி, 1648 ஆம் ஆண்டு கட்டி முடித்ததாக அறியப்படுகின்றது. இந்த செங்கோட்டை , "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் இது அரச குடும்பத்தினர் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது.

15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியா சுதந்திர தேசமானது. இது இந்தியப் பிரதமர் ஜவகர் லால் நேரு அவர்கள் 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவின் சுதந்திரக்கொடியைஇந்த செங்கோட்டையில் ஏற்றியதன் மூலம் பிறப்பானது என வரலாற்று தரவுகள் அறியப்படுகின்றது. சுதந்திர நாளில் இந்திய பிரதமரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக்ரா. 

ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.

மேலும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் அமைந்துள்ளமை ஆக்ராவின் சிறப்பம்சமாகும்.

தாஜ் மகால் - 

இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். முழு பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் , ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமையப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், 22,000 பணியாட்களைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. 

Article By TamilFeed Media, Canada
2140 Visits

Share this article with your friends.

More Suggestions | Travel