எல்லோருக்கும் இலங்கையை பிடிக்க காரணங்கள் இவைதான்

பல்லின மக்களுக்கும் இலங்கையை பிடித்திட, நீங்கள் அறிந்திடாத காரணங்கள்

இயற்கை தோற்றம் மற்றும் புற சூழல் காரணிகளாலும் பல வெளிநாட்டவர்களுக்கு பிடித்த நாடுகளின் வரிசையில் கண்டிப்பாக இலங்கைக்கு தனியிடம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இங்குவாழும் மக்களின் வாழ்க்கை முறை, இடங்கள், வ ளங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கையை விருப்பதோர் இல்லை என்றே கூற வேண்டும்.

யுனெஸ்கோ அமைப்பின் 8 பாரம்பரியம் பேணும் அழகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடப்பட வேண்டியது ஆகும். அழகிய தீவுகள், கண்கவர் நினைவிடங்கள், இயற்கை அழகுடனான நீர்நிலைகள் மற்றும் கடல் பிராந்திய அமைவிடங்கள் என்பன இலங்கையை விரும்புபவர்களை அகலக்கண் கொண்டு பார்த்திட செய்வது காணக்கூடியதாக உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளாகட்டும், பிறநாட்டு தலைவர்கள் மற்றும் பிரயாணிகள் ஆகட்டும், நாடுகளை நிர்ணயிக்கும் தலைவனாகட்டும், சாதாரண பொதுமகன் ஒருவனாகட்டும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக இலங்கை பிடித்த இடமாக திகழ்வதற்க் பல்வேறுபட்ட சுவாரஷ்யமான காரணிகள் உள்ளன. அவற்றினை பார்ப்போம்.

  • பெற்றோருடன் கடைசிவரை வாழ்வதை எவரும் நியாயம் தீர்ப்பதில்லை.

பல்வேறுபட்ட இயற்கை மற்றும் புற சூழல் காரணிகளுக்காக இலங்கையை யாவரும் ரசிக்கின்ற போதிலும் இவ்வகையான அடிப்படை பழக்க வழக்கங்களும், சில நன்னடத்தை காரணிகளாலும் அனைத்துவித மக்களும் வெகுவாக ஈர்க்கப்பட்டு உள்ளமை காணக்கூடியதாக உள்ளது.

நீங்கள் எந்த வயதினராக இருந்த போதிலும் உங்களின் பெற்றோருடன் வாழும் நிலைப்பங்கு இலங்கைக்கே உரித்தான வரப்பிரசாதமாகும். பதின்மவயதின் பின்னர் பலகாலமாகியும் திருமணம் முடிக்காமல் நீங்கள் பெற்றோருரன் அவர்களுக்கு துணையாக மட்டுமன்றி அவர்களை சார்ந்தும் வாழ்ந்திடும் நிலையினை கொண்டு இருந்தாலும் இந்த நாட்டை பொறுத்த வகையில் அது ஏற்புடையதாகவே இருக்கும்.

தென் கிழக்காசியாவில் ஏனைய நாடுகளை பொறுத்தளவில் நீங்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கூட பெற்றோருடன் வாழும் நிலையினை கொண்டிருந்தால் அதன் மூலம் உங்களின் முதிர்ச்சி நிலை சுட்டிக்காட்டப்பட்டு பலரால் கேலிக்குள்ளாக நேரிடவும் வாய்ப்புக்கள் உண்டு.

அவ்வாறே திருமணத்திற்கு முன்னதாக ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ கூடிய living together பின்னணியில் காணப்படும் முறையானது இலங்கையை பொறுத்தளவில் ஒப்பீட்டளவில் குறைவாகும். இதன் மூலமாக வரக்கூடிய பாலியல் குற்றங்களும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிகின்றது.

பெற்றோருடன் வாழும் வாழ்க்கை என்பது பலருக்கும் கிடைக்காத வரம். தொழில் நிமித்தமாகவும் பல்வேறு காரணிகளுக்காகவும் சிறு வயதிலேயே பெற்றோரின் நிழலில் இருந்து பிரிந்து செல்லும் அவல நிலை இலங்கை இளைய சமூகத்தினருக்கு மிகவும் குறைவாகும். அவ்வாறே தினமும் காலையில் வெளியே செல்வதற்கு முன்னர் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வெளியே செல்லும் பழக்கம் இன்றும் நிலவி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கொடைகளில் சிறந்த நாடாகும் இலங்கை

 இதுவும் ஆச்சரியப்பட வைக்கும் காரணிகளில் ஒன்றாகும். இலங்கையர்களை பொறுத்த வகையில் தமக்காக செலவழிக்கும் தொகையை விட பிறருக்காக தொண்டு சேவைகளுக்கு செலவிடுவதையே பெரும்பாலும் பலர் விரும்புகின்றனர்.

அண்மையில் வெளியான உலகின்கொடுப்பனவு பட்டியல் (WORLD GIVING INDEX) இல் 2016 ஆம் ஆண்டின் தொண்டாற்றுவதில் சிறந்த நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 5 ஆவது இடம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?. இந்த தரவரிசையில் இலங்கை கனடாவை விட முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

  • இயற்கையின் நுகர்ச்சி முழுவதுமாக உணரும் நிலை. 

இயற்கையை நுகர்தல் என்பது பல நாடுகளுக்கு கிடைக்காத வரமே. ஒவ்வொரு நாடுகளின் காலநிலைகளானவை அனர்த்த போக்கினை கொண்டிருக்கும். மக்கள் எப்போதும் ஒரே சீரான வாழ்வியலை நடத்த கூடிய காலநிலையானது இலங்கை நாட்டுக்கே கிடைத்தற்கரிய வரமேயாகும். இதன் காரணம் இலங்கையின் அமைவிடமும் சீதோஷ்ண நிலையம் ஆகும். மழை, குளிர் வெயில் என மனிதனின் சராசரி உடல் நிலைக்கு ஏற்றது போல காலநிலையும் ஒத்துழைப்பு தரக்கூடிய ஒரே நாடு என்பதில் இலங்கைக்கு தனிச்சிறப்பு உண்டு. எனவே இயற்கையை முழுவதுமாக நுகரக்கூடிய பெரும் பாக்கியம் இலங்கைக்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  • நாய்களுக்கும் இங்கு சுதந்திரம் உண்டு 

மக்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் மட்டுமன்றி விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளை பராமரிப்பதிலும் இலங்கை சிறப்பு வாய்ந்தது.

உலக நாடுகளை நாய்கள் பராமரிப்பில் 3 வகையாக பிரிக்கலாம்.

1. நாய்களே அற்ற நாடுகள் (ஈரான், மாலத்தீவுகள் உள்ளிட்ட மத்திய கிழக்கு) .
2. நாய்கள் வளர்ப்பில் பெரும் கட்டுப்பாடுகளை கொண்ட நாடுகள் (அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ).
3. நாய்களுக்கு கட்டுப்பாடே இல்லாத நாடுகள் (இந்தியா இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள்)


இலங்கையை பொறுத்தளவில் நாய்கள் வளர்ப்பிலும் சரி, கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கையிலும் சரி எதுவித பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை. தற்போது இவ்வாறு தெருவில் அனாதைகளாக திரியும் கட்டாக்காலி நாய்களை பாதுகாக்கவென சரணகங்கள் மற்றும் ஆதரவு அமைப்புக்கள் என்பன இலங்கையில் அதிகளவில் உள்ளமை அறியக்கூடியதானது.

அவ்வாறே வீடுகளில் குடும்ப அங்கத்தவர்போல நாய்களை வளர்ப்பதிலும் இங்குள்ளவர்கள் அக்கறை காட்டுவது கவனிக்க கூடியதானது.

  • நீங்கள் தனித்து விடப்பட மாட்டீர்கள்.

உறவுகளை பேணுவதில் இலங்கையர்களை விஞ்சிட யாரும் இல்லை எனலாம் . காலகாலமாக இலங்கையில் பழக்கத்தில் உள்ள சில நடைமுறைகள், பண்டிகை கொண்டாட்டங்கள் என்பன எமது உறவினர்களை ஒன்றிக்கும் வண்ணம் இருப்பதனை காணக்கூடியதாக இருக்கும். இதற்கான காரணம் உபசரிப்பதில் வல்லவர்கள் இலங்கையர்கள் எனலாம். 

மேலைதேய நாடுகளில் உறவினர்கள் என்பதே அற்றதொரு சூழ்நிலை உள்ளமை அறியலாம். அத்துடன் இருக்கும் ஒருசில உறவினர்களின் தொடர்புகள் சமூக வலைத்தளங்களுக்குள் சுருக்கி விடும் நிலையை அவர்கள் கொண்டிருப்பார்கள். 

இலங்கையில் இன்றும் நிலவிவரும் ஒரு விசித்திர பழக்கமானது சித்திரை வருடப்பிறப்பு மற்றும் பண்டிகை விடுமுறை என்று வரும்போது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அன்பை பரிமாற்றிக்கொள்வதில் வெளிக்காட்டுவார்கள். அந்த வகையில் நாட்டுமக்கள் ஒரு அமைதியான சூழலில் வாழ்ந்து வருவதை உணரக்கூடியதாக உள்ளது.

எவ்வகை சூழல் இயற்கை காரணிகள் இருந்த போதிலும் இவ்வகையான அறியப்படாத அறிய காரணிகளே பலரது மனங்களில் இலங்கை என்ற நாடு நிலை கொண்டுள்ளதற்கான காரணங்கள் என்பது ஆச்சரியப்படவைக்கும் உண்மை ஆகும். 

Article By TamilFeed Media, Canada
1571 Visits

Share this article with your friends.

More Suggestions | Travel