வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் அவதானம் பெறவேண்டிய உபாயங்கள்

வெளிநாடு செல்லும் இலங்கையர்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

வளர்ந்து வரும் நாடுகள் என்ற ரீதியில் அதிகமாக காணப்படும் சனத்தொகை வளர்ச்சிக்கு ஈடாக அந்தந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளும், வளப்பங்கீடுகளும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இலங்கை போன்ற மனிதவளம் நிறைந்த நாடுகளில் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது மட்டுமன்றி, இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பங்கானது வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கையர்களின் மூலம் ஈட்டப்படுவது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கிடைக்க கூடிய வருமானம் என்பது நாட்டுக்கு கிடைக்க கூடிய வருவாயில் சுமார் 54% சதவீதமாக காணப்படுவதாக இளநககை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகத்தின் ஆய்வுத்தகவல்கள் அறியத்தந்துள்ளன. அவ்வாறே கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் சுமார் 566,260 மில்லியன்ரூபாய்களாக கணக்கிடப்பட்டுள்ளமை அறியப்படுகின்றது.

இவ்வாறு நாட்டுக்கு அதிக வருமாய் உழைத்து கொடுக்கும் அயல் நாட்டி வாழும் இலங்கை பிரஜைகள் தொடர்பில் அறியப்படாத பல உண்மைகள் புதைக்கப்பட்ட போகின்றமை கவலைக்கிடமான உண்மை ஆகும். சொந்த நாட்டில் உழைக்க முடியாத நிலையில் தமது குடும்ப சூழ்நிலைக்காக வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றோர் பலரின் நிலை மிகவும் வேதனையானது என்பது அறிவீர்களா?

  • தொடரும் அவலநிலை 

கடந்த 2016 ஆம் ஆண்டின் இறுதி வரையில் இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புகளுக்காக சென்றோரின் எண்ணிக்கையானது சுமார் அண்ணளவாக 2 இலட்சத்து 43 ஆயிரம் எப்பேர் என இலங்கை புள்ளி விபரவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பெருவாரியாக தேர்ச்சியற்ற வீட்டு பணியாளர்களாக செல்லும் பெண்களின் அளவே ஒப்பீட்டளவில் அதிகமாகும்.

இவ்வாறு வெளிநாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வோர் தாம் எதிர்பார்த்தபடி வருமானம் உழைக்கின்றனரா? அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்பன தொடர்பின்ல் இன்னமும் சரியான முடிவுக்காய் எட்டப்படவே இல்லை என்பதே கவலைக்கிடமான உண்மை.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியாக அறிக்கையின் படி சுமார் 296 இலங்கை தொழிலாளர்க்கை வெளிநாடுகளில் மரணித்து இருப்பதாகவும் சுமார் 180,956,688 ரூபாய்கள் காப்புறுதி மீட்பு தொகையாக வழங்கப்பட்டுள்ளமையும் அறியப்படுகின்றது 

அண்மைக்காலமாக இவ்வாறு வெளிநாடுகளில் தம் உயிருக்கு உத்தரவாதமின்றி இறந்துபோகும் பல இலங்கையர்களின் நிலை தொடர்பில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணமே உள்ளது. கடந்த வாரத்தில் சவூதியில் உள்ள ஒருவரால் இலங்கை பணிப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டதாக சவூதி காஸெட் ஊடகம் அறியத்தந்தது . 

இவ்வாறு அறியப்படும் அறியப்படாமல் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் இன்றும் பல இலங்கையர்கள் சொல்லொணா துயர் நிலையில் அவதியியற்றுவருவது எத்தனை பெருக்கே தெரியும்? . அது மட்டுமன்றி இலங்கையில் உள்ள அவர்களின் குடும்பத்தினார் வெளிநாட்டுக்கு தமது உறவுகளை அனுப்பி வைத்து விட்டு அவர்கள் உயிருடன் திரும்புவார்களா என்பதை கூட அறியாமல் துயர நிலையில் இருப்பது யாரும் கண்டுகொள்வதாக இல்லை.

  • றிஸானாவின் பின்னும் தொடரும் அவலம்.

இலங்கையில் இருந்து சென்று உயிருக்கு உத்தரவாதமின்றிய நிலையில் அவதியுறும் பலருக்கு ஒரே எடுத்து காட்டு ரிஸானா. இன்னமும் அவளது மரணம் தொடர்பில் சரியான நிலைப்பாட்டினை எட்ட முடியாத அவளை நிலைக்கு இலங்கை அரசங்கள்ம் தள்ளப்பட்டாலும் இன்னமும் எத்தனையோ றிஸானாக்கள் அவல குரல்களை இலங்கை அரசு கண்டுகொள்வதாக இல்லை என்பது வேதனைத்தரும் உண்மை.

வெளிநாட்டுக்கு வேளைக்கு செல்வோருக்கு சரியான சம்பளம் வழக்கப்படுகின்றதா? வழங்கப்படும் சம்பளம் சரியாக பணியாளர்களின் கைகளுக்கு கிடைக்கிறதா? இடைத்தரகர்கள் மூலம் இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்கிறதா? வெளிநாடுகளில் இறக்க நேரிட்டால் முறையாக தடைகளும் இன்றி அவர்களின் சடலங்களேனும் இலங்கைக்கு எடுத்துவர இவ் அரசாங்கம் உதவிபுரிகின்றதா? இவ்வனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இன்னமும் விடையறியா கேள்விகளாகவே உள்ள நிலை தொடர்ந்த வண்ணமாக இருப்பது வேதனையளிக்கும் விடயம் ஆகும். 

  • வெளிநாட்டு வேலை தொடர்பில் பாதுகாப்பு பெறுவது எப்படி?

வெளிநாடுகளுக்கு செல்லும் அனைவருக்கும் அவல நிலை என்பது ஏற்பட்டு விடுவதும் இல்லை. மாறாக மிகவும் அவதானத்த்துடன் அங்கு தொழில் புரிந்து மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்து தமது வாழ்வியலை முன்னேற்றி கொண்டவர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். 

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? இது தொடர்பில் மக்களுக்கு சரியான தெளிவு படுத்தல் என்பது மிகவும் அவசியம் ஆகும்.

  • சரியான முகவரா?

வெளிநாட்டு வேலைக்குச் செ��்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் (Srilanka Bureau of foreign employment) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் அனுமதிப்பத்திர இலக்கம் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விதி,

சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் http://www.slbfe.lk என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். 

  • நேர்முகத் தேர்வின்போது.

நேர்முகத் தேர்வின்போது ஒவ்வொரு துரைக்குமான தனியாக பயிற்சிகளும், தேர்வுகளும் கண்டிப்பாக காணப்படும். இவை ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான நுட்பவியலை கொண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுமிருக்கும். அவ்வாறே அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் ஒவ்வ்ரு தொழிலுக்கும், அதன் நாடுகளுக்குமான அடிப்படை சட்ட வரைவுகள் மற்றும் தொழில் ரீதியான தகமை தேர்வுகள் வேறுபாட்டுடன் காணப்படும்.இவ்வாறு நேர்முக தேர்வின் போது உடல் தகுதிகாண் மருத்துவ ஆய்வில் தொடங்கை அனைத்து தேர்வுகளும் சீராக நடத்தப்படுகின்றனவா என்பதோ தொடர்பிலாவதானமாக இருத்தல் அவசியம் ஆகும்.

இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மருத்துவ காப்புறுதி வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

  • குடியகழ்வுக்கான கட்டாய பதிவு 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்ட ஒழுக்கு கோவையின் 51 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் 1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பணியாட்களை பதிவு செய்தல் சட்டமானது கட்டாயமாக்கப்பட்டும் உள்ளது . இது பின்வரும் 2 முறைகளில் கட்டணங்களை அறவீடு செய்துள்ளது.

1. பதிவு செய்தல் கட்டணம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் ஒரு பணியாளரின் பதிவுக்கட்டணம் ,அது பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். இதன் பின்னர் பணியாட்கள் இதனை புதுப்பிக்க அல்லது நீட்டித்துக்கொள்ள விரும்பின் குறிப்பிட்ட தொழில் தருனர் ஒப்பந்த சான்றிதழின் அசல் பிரதியுடன் தொழில் தருனர் அடையாள சான்றிதழ்களுடன் நீடுத்து கொள்ளலாம் 

பதிவு கட்டணம்: LKR 15,200 + VAT 15% + NBT 2%

2. புதுப்பித்தல் கட்டணம். 
அவ்வாறே பணியாளர்கள் வெளிநாட்டில் தமது ஒப்பந்த கால எல்லை முடிவடைந்து இலங்கைக்கு திரும்பி வந்து பின்னர் மீண்டும் அதே தொழில் கம்பெனிக்கு செல்பவராயின் அவருக்கு புதுப்பித்தல் கட்டணமே அறவிடப்படும் .இது கம்பெனியின் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அசல் பிரதியுடன் பதியப்படல் அவசியம் ஆகும்.

புதுப்பித்தல் கட்டணம் LKR 3,200 + Vat 15% + NBT 2%

3. மீள் பதித்தல் கட்டணம்.

மீள் பதித்தல் என்பது குறிப்பிட்ட பதிவு செய்த காலம் முடிவடைந்து பணியாளர்கள் புதிய கம்பெனி மற்றும் ஒப்பந்தத்தில் மீண்டும் வெளிநாடு செல்வதற்கு தயார் நிலையில் இருந்தால் அவரது பதிவு மீள் பதிவு செய்யப்படுதல் அவசியம். இதற்கான பதிவு என்பது புதிய பதிவாகவே எடுத்துக்கொள்ளப்படும் 

இவ்வாறு பதிவு செய்தலின் மூலம் பெறப்படும் கட்டணமானது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளின் நலனுக்காகவும், மற்றும் அவர்களது குடும்பநல திட்டங்களுக்காகவும், அவ்வாறே காப்பீட்டு கடன்கள், சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பணியாளர்களின் அனைத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்த படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • எங்கு பதிவு செய்வது?

குறிப்பிட்ட நபர் முதலாவது தடவையாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்பவர் ஆயின் அவருக்கு பதிவு செய்தல் என்பது கண்டிப்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலேயே மேற்கொள்ளல் அவசியம்.இதற்கென அவர் அவரது கல்வி சான்றிதல்கள் , கடவுசீட்டு உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்தல் அவசியம். அத்துடன் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் கட்டாயமான பயிற்சி வகுப்புகள் ஒரு வாரம் அரச திணைக்களத்தினால் நடத்தப்படும். இந்த பயிற்சி சான்று என்பது பெறப்படும் பட்சத்திலேயே அவருக்கு பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்பது சட்ட முறைமையாகும்.

அவ்வாறே முன்னர் பதிவு செய்தவர்கள் தமது பதிவுகளை புதுப்பித்தல் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலேயே மேற்கொள்ளும் அதே வேலை அதற்கு இணையாக புதுப்பிப்பதற்கான சான்றிதழ்கள் மற்றும் கட்டணத்துடன் சர்வதேச விமான நிலைய வேலைவாய்ப்புக்கள் பணிமனையில் புதுப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

  • பதிவு செய்வதின் அவசியம் 

பணியாளர்களின் கல்வி தகைமைகளை அடிப்படையாக கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் அனுமதி சான்றிதழ்கள் பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வாறே அவர்களின் தொழில் மற்றும் நாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கான பயிற்சி நிலைகள் போன்ற வேறுபாடும் .

இந்த நடைமுறையானது பதிவுகளை புதுப்பிப்பவர்களுக்கானது மட்டுமே. ஆரம்பபதிவு மற்றும் மீள் பதிவாளர்கள் கண்டிப்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பணியகத்தின் பயிற்சியுடன் கூடிய சான்று பெறவேண்டியிட்டது அண்மைக்காலம் முதல் கட்டாயமாக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • செய்யவேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!
  1. அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.
  2. அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.
  3. சரியான முதன்மை முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.
  4. வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ கடவுசீட்டுக்களை புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
  5. வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.
  6. வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.
  7. வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் அடையாள அட்டையுடன் தான் செல்ல வேண்டும்
  8. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
  9. எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
Article By TamilFeed Media, Canada
2573 Visits

Share this article with your friends.

More Suggestions | Business