புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்துகொள்வது எப்படி

உங்களிடம் இருக்கும் சிறிய அளவு பணத்தை முதலீட்டு வருமானமாக மாற்ற புத்திசாலித்தனமான வழிகள் 
புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்துகொள்வது எப்படி

தொழில் தொடங்கவோ அல்லது அதனை முன்கொண்டு செல்லவோ பணம் தேவை. ஆனால் பெரியளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற பயத்தில் பலரும் புதிதாக தொழில் தொடங்கவோ அல்லது செய்யும் தொழிலினை தொடர்ந்து முன்னேற்றவோ விரும்புவது இல்லை. 

போதிய அளவு பணத்தினை நீங்கள் வங்கிகளில் சேமித்து வைக்கலாம். ஆனால் அது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல. உங்களின் சேமிப்பானது பெரிய அளவில் உங்களுக்கு இலாபத்தினை பெற்றுத்தர போவது இல்லை.


உங்களிடம் போதிய அளவு பணம் இருந்த போதிலும் அவற்றை வைத்து முதலீடு செய்வதற்கு தயக்கம் இருக்கும். அவ்வாறே நீங்கள் செய்யும் முதலீட்டின் மூலம் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்க எளிய வழிகள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலையான வாய்ப்பு (Fixed Deposit).

சாதாரண சேமிப்பு வைப்புக்களை விட நிலையான முதலீடுகளில் உங்களின் பணத்தை வைப்பு செய்வது புத்திசாலித்தனமானது ஆகும். பொதுவாக நிலையான வைப்பின் வட்டி வீதமானது அதிகரித்த நிலையினை மட்டுமே காட்ட கூடியது ஆகும். இது ஒரு நிலையான வருவாய்க்கான முதலீட்டு முறை ஆகும். முதலீட்டின் மீதான வட்டி முதலீடு செய்யப்படும் பணத்தின் அளவு மற்றும் முதலீட்டு காலத்தை சார்ந்துள்ளது. இந்த முதலீட்டு வருமானமானது மாத வருமானமாகவோ அல்லது முதலீட்டு கால முடிவில் வட்டி மூலம் வருமானமாக பெறப்படுகிறது. நீங்கள் ஆரம்ப முதலீடோடு அதுவரை பெறப்பட்ட வட்டி வருமானத்தினை மீள் முதலீடாக மேற்கொள்ளலாம் . எனவே அதன் பின்னர் உங்களின் வட்டி வீதத்தினை அதிகரித்து கொள்வதுடன் அதற்கான முதலீட்டு வருமானமும் அதிகமாக உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.

அவ்வாறே முதிர்ச்சி காலத்திற்கு முன்னர் அவசர தேவைகள் ஏதும் ஏற்பட்டு உங்களுக்கு பணம் மீளப்பெறவேண்டி நேர்ந்தால் அதன் போது உங்கள் முதலீட்டின் ஒரு பகுதி கடனாக பெற்றுக்கொள்ளவும் இந்த நிலையான முதலீட்டின் மூலம் வழிகள் உண்டு. அதற்கான கடன் மீள செலுத்தும் கால எல்லை என்பன உங்களின் வசதிக்கு ஏற்ப ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

பங்கு முதலீடுகள் (STOCK)

பங்குகளில் முதலீடு செய்வது தொடர்பில் ஒருவித பயம் இருக்கும். பங்கு பரிவர்த்தனையில் இலாப நட்டங்களை பொறுத்தே வருமானம் என்பது பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதுவே அந்த பயம் ஆகும். ஆனால் பங்குகளில் நமது பணத்தை முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிட்ட துறையில் உழைக்கப்படும் இலாபத்தை இலாபமாகவே நம்மால் பெற்றுக்கொள்ள முடிகின்றது. அவ்வாறே காலப்போக்கில் பங்குகளின் பெறுமதிகள் குறிப்பிட்ட நிதி மூலத்தின் வருமான பங்கேற்புக்கு அமைவாக அதிகரிக்கப்படுமேயானால் அதற்கு ஏற்றது போல பங்கின் பெறுமதியுடன் அதற்கான இலாபமும் அதிகப்படுத்தப்படுவது இதன் ஒரு சிறப்பம்சம் ஆகும்.

அவ்வாறே நீங்கள் கொள்முதல் செய்த பங்குகளின் நிதி நிலையானது இலாபகரமாக இருக்கும் போதே அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தும் கூட உங்களால் வருமானத்தினை இலாபகரமாக உழைத்துக்கொள்ள முடியும் என்பதால் பங்குகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முறைகளில் ஒன்றாகும்.

மனை விற்பனை (Real Estate).

இந்த காலத்தில் பலராலும் விரும்பப்படுவதும், காலம் செல்ல செல்ல அதிகரித்த வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடியதுமான புத்திசாலித்தனமான முதலீட்டு முறையே மனை விற்பனை முறை ஆகும். வீடு, நிலம், காணி போன்ற சொத்துக்களுக்கு நாம் செய்யும் முதலீட்டின் மூலம், வாடகை வருமானம் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறே மனை விற்பனை தொடர்பில் மூலதனமாக நாம் இடும் சிறு தொகை பணமும் காலப்போக்கில் சொத்து பெறுமதி அதிகரிப்பதன் மூலம் பல மடங்காக நமக்கு திரும்ப கிடைக்கின்றது.

காலப்போக்கில் சொத்தின் இருப்பு பெறுமதி அதிகரித்து செல்லும் பட்சத்தில் அதனை குத்தகைக்கு விடுவதன் மூலமும், வாடகை வருமானத்தின் மூலமும் ஒரு சீரான வருமானத்தினை பெரிதாளவில் நிலையாக பெற்றுக்கொண்டுவர முடியும்.

அவ்வாறே மனை விற்பனை மூலமாக உங்களிடம் இருக்கும் காணி மனைகள் போன்றவற்றை அன்றைய அதிகரித்த பெறுமதிக்கு இலாபகரமாக விற்று வருமானத்தையும் நீங்கள் பெறலாம்.

இன்றைய காலத்தில் பலரும் தம்மிடம் இருக்கும் பணத்தினை கொண்டு சிறயளவிலான காணிகளை வாங்கி அல்லது குத்தகைக்கு பெற்று அதன் மூலம் பெறப்படும் வாடகை அல்லது குத்தகை பெறுமதி மூலம் அதிக வருமானத்தை நிலையாகவே பெற்று வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

யூனிட் ட்ரஸ்ட் (Unit Trust)

உங்கள் முதலீட்டுக்கான இன்னுமொரு புத்திசாலித்தனமான முறையே யூனிட் டிரஸ்ட் முறை ஆகும். இது அலகுகள் ரீதியாக உங்கள் பங்கு பரிவர்த்தனை தொடர்பில் சகலவித பங்கு செலவாணி பத்திரங்களின் அடிப்படையில், பட்டியல் ஒன்றின் மூலம் நிர்வகிக்கும் நிதியியல் சார்ந்த அறக்கட்டளை நிறுவனமே இந்த யூனிட் ட்ரஸ்ட் ஆகும். இந்த அறக்கட்டளையின் மூலம் சிறிய வகை முதலீட்டாளர்களின் பங்குகளை கூட கொள்வனவு செய்யலாம், அல்லது விற்பனை செய்யலாம்.

இந்த அலகு சார் அறக்கட்டளைக்கு நிதிப்பங்கேற்பாளர்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். அதாவது உங்களின் முதலீடுகளின் மூலமாகவே இந்த நிதியியல் முறைமை இயங்கும் தன்மையினை கொண்டிருக்கும்.

பங்கு செலாவணி பத்திரங்களை பட்டியலின் அடிப்படையில் இவை நிர்வகிப்பதனால் மக்களுக்கு பங்கு தொடர்பிலான அறிவார்ந்த விழிப்புணர்வு���ள் எப்பொழுதும் வழங்கிட தவறுவது இல்லை. அவ்வாறே உங்கள் பங்கிடலுக்கான சகலவிதமான ஆலோசனைகளையும் அறிந்துகொள்ள உதவும் இடைத்தரகு முறைபோன்றதுவே இந்த யூனிட் ட்ரஸ்ட் ஆகும்.


குறிப்பிடப்பட்டு இருக்கும் முறைகளின் மூலம் வருமானத்தினை உழைக்கும் ரீதியில் முதலீடுகள் செய்யப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பான தேடல்களும், அறிவுகளும் அடிப்டையாகவேனும் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அவ்வாறே அவை பற்றிய தேடல்கள் மட்டுமன்றி சரியானதொரு ஆலோசனை பெறப்படும் பொழுது நீங்கள் எதிர்பார்த்த அளவை விட அதிகபட்சமாக வருமானத்தினை உழைத்துக்கொள்ளக்கூடிதாகவும் இருக்கும்.


இவ்வகை புத்திசாலித்தனமான முறைமைகளின் மூலம் இலாபத்திற்கு மேலதிகமாக சிக்கனமாகவும், விவேகத்துடனும் வருமானத்தை ஒழுங்காக சம்பாதிக்கும் யுக்தியே இவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Article By TamilFeed Media, Canada
12457 Visits

Share this article with your friends.

More Suggestions | Business