வாடிக்கையாளர்களின் அழைப்பு என்பது ஒவ்வொரு வணிக நிறுவுனருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. வாடிக்கையாளரின் பின்னூட்டலே ஒவ்வொரு வணிகனையும் ஊக்குவிக்கவும் , மேலும் முன்னேறவும் உதவிடுவது ஆகும். இவ்வகை வியாபாரம் தொடர்பான வாடிக்கையாளர்களின் அழைப்பினை எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது என அறியலாம்.
உரையாடலை பதிவுசெய்தல்
ஒவ்வொரு வணிகனுக்கும் அவனது ஒவ்வொரு வாடிக்கையாளனும் முக்கியத்துவம் பெறுகின்றான். அவனது திருப்தி தன்மையே ஒவ்வொரு வணிகனதும் குறிக்கோள் எனலாம். இதற்கென அவனை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தும் சேவைகளை வணிகன் வழங்குவதன் மூலம் திருப்தி நிலை ஏற்படுகின்றது.
பொதுவாக இரு தரப்பினர்களினது தொலைபேசி அல்லது பொது உரையாடல்களை பதிவு செய்தல் என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் விரும்பப்படாத ஒன்று. ஆயினும் வணிகம் என்ற பொழுது தரவு சேகரிப்பு என்ற நிலையில் இவ்வாறு உரையாடல் பதிவு செய்வதும் , மின்னஞ்சல் குறிப்புக்களை பெற்றுக்கொள்வது அதி முக்கியத்துவம் வாய்கின்றது.
இரு தரப்பினரது நம்பிக்கையின் பிரகாரம் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுத்திவது சிறந்தது.
தெளிவான குறிப்புக்கள்
வாடிக்கையாளரின் உரையாடல்களை தொடர்வதற்கு முன்னர் கண்டிப்பாக அவற்றினை குறிப்பு எடுத்து வைத்துக்கொள்வது அவசியம். உதாரணமாக வாடிக்கையாளர் கேட்கக்கூடிய கேள்விகளை முன்னதாகவே அறிந்து அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக விலை, தரம் உள்ளிட்ட உள்ளடக்க விடயங்களை குறிப்பு எடுத்து வைப்பது இரு தரப்பினரது உரையாடலுக்கு இலகுவாகம் அமையும்.
அணுகுமுறைகளை ஆராய்ந்து பார்த்தல் .
உரையாடல் அணுகுமுறைகளை ஆராய்வதன் அவசியம் இரண்டு தரப்பிலும் கருத்து பரிமாற்றலானது சரியான முறையில் இடம்பெற்றனவா என அறிந்துகொள்வதற்கு உதவும். இது தொடர்பாடல் வழுக்களை வெகுவாக குறைக்கும். நாம் குறிப்பிட்ட விடயங்கள் சரியா? தரவுகள் சரியானதா ? பெறப்பட்ட தரவுகள் சரியா? போன்ற அனைத்து விடயங்களும் கண்டறிய அணுகுமுறைகள் ஆய்வு முக்கியப்படுவம் பெறுகின்றது.
இலக்குகளை மேம்படுத்தல்.
உங்கள் விற்பனையாளர்களுக்கான இலக்குகளை அமைப்பதன் மூலம் உங்கள் முன்னேற்றம் நிலையானதாகவும் அளவிடத்தக்கதாகவும் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனவே உங்கள் விற்பனையாளர்கள் நிலையான முயற்சிகள் பார்க்க மற்றும் அவர்களின் முயற்சிகள் மூலம் உந்துதல் உணர முடியும்.
தந்திரோபாயங்களை பரிசீலித்தல்.
வாடிக்கையாளர்களின் அழைப்புகளை , அவர்களது பின்னூட்டல்களை ஆராய்ந்து விளக்கம் தருவதானது முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் மூலம் வியாபார நுணுக்கங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அவ்வாறே அவர்களிடம் இருந்து பெறப்படும் புதிய அணுகுமுறைகளும் பிரயோகிப்பது தொடர்பில் அவர்களுக்கு உறுதியளிக்கப்படும் ஆயின் . இரு தரப்பினரது உரையாடலின் வெற்றி உறுதிப்படும் அதே நேரம் வியாபார நிலை மேம்படும் என்பதனை உறுதியாக கூறலாம்.