பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தவிர்ப்பது எப்படி

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் ஏற்படக்கூடிய பாலியல் தொல்லைகளை எவ்வாறு தவிர்க்கலாம்.
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தவிர்ப்பது எப்படி

ஆண், பெண் இரு பாலரும் எல்லா இடங்களிலும் சமமாக வேலைகள் செய்தாலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் என்பது இடம்பெறாத இடங்களே இல்லை என்ற வருத்தம் இன்று நிலவி வருகின்றது. தினமும் பெண்களுக்கு எதிரான ஏதேனுமொரு வன்முறையோ, அல்லது அநீதியோ அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கத்தான் செய்கின்றது. இவற்றை பலர் கண்டும் காணாமலும் சென்றுகொண்டு இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது .

பெண்களும் ஆண்களும் சமமாக வேலைகளை பகிர்ந்து செய்துகொண்டு வந்தாலும் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் ஏதேனும் வகையில் அனைத்து அலுவலக சூழலிலும் அரங்கேறிய வண்ணமே உள்ளதாக அறியப்படுகின்றது. இதற்கான காரணிகள் பல இருப்பினும், அவற்றில் இருந்து பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள நேர்வது அவதானிக்க கூடியதாக உள்ளது

வேலை செய்யும் சூழலே பெண்களுக்கு ஆபத்து

பெரும்பாலும் வீடுகளில் இருக்கும் பெண்களை விட வெளியிடங்களில் வேலைகளுக்காக வரும் பெண்களே இவ்வாறு பாலியல் தொந்தரவுகளுக்கு பெரும்பாலும் உள்ளாவதாக ஆய்வு ஒன்றின் தகவல் அறியப்படுத்துகின்றது. இதற்கான பல காரணிகள் முன்வைக்கப்பட்டாலும், பெரும்பாலும் பெண்கள் மீதான ஆண்களுக்கு இருக்கும் போட்டித்தன்மை, மற்றும் பொறாமை நிலை போன்ற மனோவியல் ரீதியிலான காரணிகளையே ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

வேலை செய்யும் இடங்களில் பெண்களும் சக தொழிலாளர்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும், அவள் வேற்று பாலினை சார்ந்தவள், போன்ற விடயங்களை கருதாமல் சக ஊழியர் என்ற எண்ணத்துடன் ஒன்றித்து பணிகளை செய்யும்போது இவ்வகையான முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.

பாலியல் தொல்லைகளுக்கு எடுத்துக்காட்டு

பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறுவிதமான பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. அவற்றில் சில இவை.

1. இரட்டையர்த்த பேச்சுக்கள், நகைச்சுவைகள் போன்றவற்றை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறுதல்.பாலியல் சைகைகள், ஆடைகள் குறித்த பேச்சுக்கள்.

2. பெண்களின் அனுமதி இன்றி தொடுதல், கிள்ளுதல் மற்றும் அணைத்தல்

3. பாலியல் தொடர்பான மின்னஞ்சல், குறும் செய்திகள் போன்றவற்றை அடிக்கடி பகிர்தல்

பாலியல் தொல்லைகளை தவிர்த்திட சட்ட அணுகுமுறைகள்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின் அடிப்படையில்1964 ஆம் ஆண்டு சிவில் பாதுகாப்பு சட்டத்தின் VIIஆம் பிரிவின் படி ஊழியர்களுக்கு பணியிடங்களில் விடுக்கப்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பெண்கள் தாம் தொழில் புரியும் இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு எதிராக காவல்துறையிடமும், தொழிலாளர் நலன் பாதுகாப்பு பிரிவினரிடமோ, அல்லது மனித உரிமைகள் ஆணையாளரிடமோ இது குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.

முன் வந்து உங்கள் பிரச்சனைகளை பகிருங்கள்.

பெண்கள் இவ்வாறு பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகும் பட்சத்தில் பலரும் அது தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டவோ அல்லது முறைபாடினை செய்யவோ தயங்குவது காணக்கூடியதாக விடயம். அதற்கான காரணம் அவர்களது குடும்ப பின்னணி மற்றும் சூழல் என்பனவாகும். இவ்வாறு பாலியல் ரீதியில் அவலங்களை எதிர்நோக்கிய பெண்கள் பலரும் சமூகத்தினருக்கு பயந்தே தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தயங்கி இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

இடைவெளிகளை தவிர்த்திடுங்கள்.

பொதுவாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சக ஊழியருடன் இருக்கும் இடைவெளி என்றும் கருதப்படுகின்றது. பெண் ஊழியர்கள் அவர்களுடன் பணிபுரியும் எதிர்பால் ஊழியரிடம் தமது பிரச்சனைகளை கூறுவதற்கு காட்டும் தயக்கம் அவர்களை பெரும்பாலும் பின்னடைய செய்கின்றது. எனவே சக பெண்மற்றும் ஆண் ஊழியர்களிடம் சரளமாக பேசி அவர்களை சக ஊழியர் என்ற ரீதியில் மத்தித்து பல பிரச்சினைகளில் இருந்தும் தவிர்த்துக்கொள்ள வழி ஆகும்

உங்கள் தொழில் ரீதியில் எதுவித மாற்றங்களை கூட செய்யாமல் முன்னேற்றமான நிலையினை அடைந்துகொள்வதற்கு பெண்களின் நிர்வாகத்திறன் மற்றும் தொழிற்திறனை பயன்படுத்துவது சிறந்த பெறுபேறுகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் ஒரு யுக்தியாக கருதப்படுகின்றது. எந்தவொரு தொழிலுக்கும் தொழிலாளரின் பங்களிப்பு என்பதே சிறந்த பெறுபேறுகளை தரக்கூடியது. எனவே திறமைமிக்க பெண்களை கொண்டு உங்கள் தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்துவதே புத்திசாலித்தனமானது.

 

Article By TamilFeed Media, Canada
4636 Visits

Share this article with your friends.

More Suggestions | Business