கைகளை சுத்தமாக கழுவுவோம். சுத்தமாக உணவு உண்போம்.

நாம் பொருள்களை தொடும் போது நம்மையறியாமல் கண்ணுக்குத் தெரியாத நோய்க் கிருமிகள் கைகளில் தங்குகின்றன. இவற்றைக் கழுவி நீக்காமல் உணவுப் பொருள்களை எடுத்து உட்கொள்வதால் நாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம்.

எமது கைகளில் பல கிருமிகளான பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சை கிருமிகள் காணப்படலாம். இவை நாம் சாப்பிடும் போது அல்லது எங்கள் கண்களை கசக்கும் போது அல்லது மூக்கினை தொடும் போது, அந்த கிருமிகள் எமது உடல்களில் நுழைய முடியும், இவற்றால் ஆபத்தான மற்றும் மரணம் விளைவிக்கும் நோய்கள் வரலாம்.

சோப் மற்றும் சூடான தண்ணீர் கொண்டு முறையாக கை கழுவும் போது கைகளில் வெளிப்படையாக தெரியும் அழுக்கு மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் அகன்று போகும். இதனால் சளி, காய்ச்சல், இரைப்பைக் குடல் அழற்சி,வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி-மயக்கம், குடற்புண் போன்ற கிருமி தொற்று நோய்களை தடுக்க உதவும்.

 கைகளை நன்றாக கழுவுவோம்.

முற்றிலும் வெதுவெதுப்பான நீரில் உங்கள் கைகளை ஈரமாக்குங்கள்.

கையின் மேற்பரப்பில் அதிக இரசாயனக் கலப்பில்லாத சோப் அல்லது கிரீம்கள் அல்லது திரவ பதார்த்தத்தை எடுங்கள். 

அந்த நுரையினை கையோடே தேய்த்து விரல்களுக்கு இடையே, விரல் நகங்கள், கீழ் பகுதி, மேல் பகுதி, மணிக்கட்டு என முழு இடமும் பூசுங்கள்.

பின்பு சோப் எச்சம் நீங்கும் வரை நன்றாக கழுவுங்கள்.

பின்னர் ஒரு சுத்தமான துணி அல்லது காகித துண்டு மூலம் துடையுங்கள்.

நீங்கள் உணவு தயார் செய்ய முன், சாப்பிட முன், குழந்தைகளுக்கு பால் அல்லது மருந்து கொடுக்கும் முன் எப்போதும் எந்த சூழ்நிலைகளிலும் உங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.

 

Article By TamilFeed Media, Canada
2778 Visits

Share this article with your friends.

More Suggestions | Health