கத்தரிக்காய் உடலுக்கு புத்­து­ணர்வையும், வலிமையையும் தரும்.

கத்தரிக்காயை பிஞ்சாக சமைத்து உண்ணும் போது நாம் சாப்பிடும் மற்ற உணவுகளை விரைவாக செரி­மா­னம் அடைந்து சத்தாக மாற்றி உடலுக்கு கொடுக்கிறது.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி1, விட்டமின் பி2, போன்ற விட்டமின்களும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து காபோவைதரெட், பொஸ்பரஸ், கால்சியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளது. இதில் விட்டமின்கள் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே உடலுக்கு அதிக நன்மையளிக்கும். முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும்.

விட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளதால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாற பயன்படுகிறது. பாரிச வாத நோய் தடுக்கப்படுகிறது, பசியின்மை அகற்றுகிறது, உடல் சோர்வடைதலை குறைகின்றது, மூச்சுவிடுதலில் சிரமம் மற்றும் தோல் மரத்துவிடுதல் போன்றவைகளை குணப்படுத்துகின்றது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

இதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டுகிறது இதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் இரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது. இதிலுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. இரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது.

இதில் பொதிந்திருக்கும் அன்டோ சியன் (antto Saiyan) எனும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்தை கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. 

Article By TamilFeed Media, Canada
5314 Visits

Share this article with your friends.

More Suggestions | Health