அல்சரை குணப்படுத்தும் அப்பிள் பழத்தின் மகத்துவம்.

அல்சரை குணப்படுத்தும் அப்பிள் பழத்தின் மகத்துவம்.

வயிற்று புண்ணை குணப்படுத்த கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை தரவல்லதும், கேன்சரை தடுக்க கூடியதுமான அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. 

 கர்ப்பிணிகள் அப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்கு எலும்பு வளர்ச்சி, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்புக்கு பலத்தை கொடுக்கும் தன்மை கொண்ட அப்பிள், கேன்சர் செல்களை போக்க கூடியது. அப்பிளை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். அப்பிள் துண்டுகளுடன் ஒரு ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து எடுத்துகொள்ள வேண்டும். இதை சாப்பிட்டுவர வயிற்றுப்புண், குடல்புண் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும். மலச்சிக்கல் தீரும். கொழுப்பு கரையும். கேன்சரை தடுக்கும். சாப்பிட்ட உணவு நெஞ்சுக்குழிக்கு வருவதை தடுத்து, புண்களை ஆற்றும். 

அப்பிள் பழத்தில் விட்டமின்-சி அதிகமாக உள்ளது. இரும்பு, கல்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த அப்பிள், சோர்ந்துபோன செல்களை புதுப்பிக்கிறது. பெண்களுக்கு எலும்புகள் வலுவின்றி இருக்கும். அப்பிள் பழம் சாப்பிட்டுவர எலும்புகள் பலமாகும். கெட்ட கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்ட அப்பிள், இதய அடைப்பை சரி செய்யும். தொண்டை புண், குடல் புண்களை அப்பிள் பழம் சரிசெய்யும் தன்மை கொண்டது. 

Article By TamilFeed Media, Canada
4113 Visits

Share this article with your friends.

More Suggestions | Health