விஷ ஜந்துக்கள் அணுகாத துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்வோம் .

துளசி பட்ட நீரும் மருந்தாகும் என்ற வகையில், இந்த துளசி நீரானது உடலை மட்டுமன்றி, மனதையும் தூய்மைப்படுத்தும்.

துளசி இலை போட்டு ஊறிய தீர்த்தம் வயிறு சுத்திகரிக்கப்பட்டு, நல்ல ஜீரண சக்தியை தரும். 'திருத்துழாய்' என்று அழைக்கப்படும் துளசிதான் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

கபம் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி, ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்ற குளிர் சம்பந்தமான நோய்களும் இந்த துளசியால் விடைபெற்று செல்லும். முக்கியமாக இளம்பிள்ளை வாதம் நோய் எட்டிப்பார்க்காமல் இருக்க துளசியானது அருமருந்தாக உள்ளது. துளசியின் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்துவருவதன் மூலமாக இதனை தடுக்க முடியும். குழந்தைகளின் வயிற்று வலி தீர, காது சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த, வெண்குஷ்ட நோய்க்கு, நீரிழிவு நோய்க்கு, களைப்படைந்த மூளைக்கு சுறுசுறுப்பளிக்க, இருதய நோய்க்கு, ஆஸ்துமா மற்றும் மார்பு சம்பந்தமான நோய்க்கு, உடல் துர்நாற்றம் மறைய, நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக, தீராத தலைவலி தீர, வெயில் காலத்தில் வரும் கண் கட்டி குணமாக, உள்நாக்கு வளர்ச்சியை தடுக்க என அனைத்து நோய்களுக்கும் துளசியை பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் துளசிச் சாற்றின் மூலம்,

  • காய்ச்சல் குணமடையும்.
  • தொண்டை புண் ஆறும்.
  • தலைவலி குறையும்.
  • கண் பிரச்சனை தீரும்.
  • பல் பிரச்சனை தீரும்.
  • தோல் நோய் அகலும்.
  • சிறுநீரக கற்களை வெளியேற்றும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • பூச்சி கடித்தால் ஏற்படும் விசத்தைக் குறைக்கும்.

துளசி விஷக்கடிக்கு அருமருந்து. துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அணுகாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடியை ஒவ்வொருவரும் வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் வளர்ப்பது நன்மை தரும்.

Article By TamilFeed Media, Canada
2970 Visits

Share this article with your friends.

More Suggestions | Health