உலக அளவில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றாலும் இந்த முறை இது தொடர்பான அனைத்துப்பங்குதார்ர்களும் ஓரிடத்தில் இரண்டாவது முறையாக ஒன்று சேர்ந்தது உலவ அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் 2009 ம் ஆண்டு டென்மார்க்கில் நடந்த இது போன்ற ஒரு தீர்க்கமான காலநிலை மாநாட்டில் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமல் போனதும் உலக சூழலியல் ஆர்வலர்களால் கடும் விசனத்திற்கு உள்ளாக்கப்பட்டது!
இவற்றுக்கு எல்லாம் ஒரு படி மேலாக கோப் உச்சி மாநாட்டுக்கு ஒரு மாத்த்திற்கு முன்பாக பரிஸில் நடைபெற்ற ஐஸ் தீவிரவாதிகளின் தாக்குதலும் கோப் தொடர்பாக பல்வேறு மனநிலையை தோற்றுவித்திருந்தது.
இவ்வாறு பல தடைகளைத்தாண்டித் தொடங்கிய மாநாட்டிற்கு எமது ஜனாதிபதி உட்பட அனைத்து உலகத்தலைவர்களும் வந்து உரையாற்றி கோலாகலமாகத் தொடங்கிவைத்தனர். மாநாடும் மெல்ல மெல்ல முக்கியமான கட்டத்தை அடைந்தது... அது தான் உலக வெப்பநிலையை 2 'C ஆல்குறைப்பு அல்லது கரியமிலை வாயு (அது தான் காபனீரொட்சைட்) வெளியேற்ற குறைப்பு. இந்த முக்கிய கட்டத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தை காரணம் காட்டி இணக்கத்திற்கு தயங்கின. சீனாவும் இந்தியாவும் கடுமையாக எதிர்த்தன. இப்போது வெண்ணை திரையும் போது தாழி உடைவதை தடுக்க கனடா அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியது. கனடாவினால் பிரேரணையில் ஒரு சிறிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது பூமியின் தற்போதைய தேவை 1'C வெப்பநிலை குறைய வேண்டும் என்பதே! ஆக பிரேரணையை 2'C இலிருந்து 1.5'C ஆக மாற்றியமைத்ததோடு மட்டுமில்லாமல் இதற்கு தேவையான தொழில் நுட்பத்தையும் வழங்க முன்வந்தது. இதனால் ஆர்பரிப்பும் ஆரவாரமும் அடங்க தீர்வும் எட்டப்பட்டது.
இவ்வளவு ஆரவாரங்களுக்கு நடுவிலும் உருகுவே மற்றும் கொஸ்டரிக்கா இரு நாடுகளும் தாம் தமது நாட்டில் 99% மீள் சுழற்சி சக்திமுறையை பயன்படுத்தும் மார்க்கத்தை கூறி வளர்ச்சியடைந்த நாடுகளையே மிரட்டின.
ஆக மொத்தம் இந்த மாநாடு ஒரு தீர்மானம் மிக்க வெற்றியோடு முடிந்திருக்கிறது. அதாவது, உவக வெப்பநிலையை 1.5'C ஆல் குறைத்தல், மீள் சுழற்சி சக்தி வளத்திற்கு முதலீடுகளை அதிகரித்தல் மற்றும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அனைவரும் கலந்து பெறுபேறுகளை மதிப்பீடு செய்தல் என்பவையே அவை.
இவை உலக வெப்பநிலை அதிகரித்தல் மற்றும் காலநிலை மாற்றப் பிரச்சினைகளை முற்றாகத்தீர்க்காவிடினும் தற்காலிகமாகவாவது ஒரு தீர்வைத்தந்தது அனைவருக்கும் பெருமகிழ்ச்சி !