நீங்கள் நிஜம் என்று நம்பிய இவை அனைத்தும் பொய்யானவை என்று உங்களுக்கு தெரியுமா  

நீங்கள் நம்பியதெல்லாம் பொய்களைத்தான். 

காலகாலமாக நாம் கண்டும், கேட்டும் வந்த சில விடயங்கள் மற்றும் செய்திகளையும் கதைகளையும் நாம் உண்மை என்று நம்பி வந்திருப்போம். அவற்றில் இருக்க கூடிய நம்பகத்தன்மையை நாம் ஒருபோதும் ஆராய்வது இல்லை. இவ்வகையான சில விடயங்கள் உண்மை அல்ல போலி என்று நமக்கு தெரியாமலேயே போய் விடுகின்றது என்பதை அறிவீர்களா?

  •  நியூட்டன் தலையில் ஆப்பிள் விழவில்லை 

ஒஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள நியூட்டனின் ஆய்வகத்தில் வெளியிட்ட தகவலின் படி வரலாற்று சம்பவத்தில் குறிப்பிடப்பட்டது போல நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழவில்லையாம். நியூட்டன் தோட்டத்தில் இருந்த போது ஆப்பிள் மரத்தில் இருந்து கீழே விழுந்ததை கண்டே புவியீர்ப்பு விசை பற்றி ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மாறாக அவரின் தலையில் ஆப்பிள் விழுந்ததாக குறிப்புகளில் இல்லை என்று கூறுகிறார்கள் 

  • விதைகளை விழுங்குவதால் வயிற்றில் மரம் முளைக்கும் 

சில பழங்களை உண்ணும்போது அவற்றில் காணப்படும் சிறு விதைகள் தவறுதலாக விழுங்கி விடுவது வழக்கம் தான். அவ்வாறு விழுங்கப்படும் விதைகள் வயிற்றில் மரங்களாக முளைக்கும் என்று சிறுவயதில் நமது பெரியவர்கள் நம்மை பயமுறுத்தி வைத்திருப்பது ஞாபகம் வருகின்றது. உண்மையில் விதைகளை விழுங்குவதால் வயிற்றில் மரம் முளைப்பதில்லை. மாறாக விதைகள் சமிபாடடைய நேரம் எடுக்கும் அல்லது சில விதைகள் சமிபாடடையாமலேயே உடலில் இருந்து வெளியற்றப்படும் என்பதே உண்மை. இதனை தடுப்பதற்கே முன்னோர்கள் கூறி வைத்த கட்டுக்கதை விதைகளை விழுங்கினாள் வயிற்றில் மரம் முளைக்கும் என்பதாகும்.

  • பழிவாங்கும் பாம்பு 

சிறுவயதில் இருந்து மிகவும் மோசமாக ஏமாற்றப்பட்ட விடயங்களில் முதன்மை பெறுவது பாம்பு பழிவாங்கும் என்பது தான். இது குறித்து தமிழ் திரைப்படங்களில் எக்கச்சக்கமாக வெளிவந்துள்ளன. உண்மையில் சாதாரண பாம்பின் ஆயுட்காலம் என்பது வெறுமனே10 வருடங்களுக்கு உட்பட்டது ஆகும். அது தவிர்த்து சிலவகை பாம்புகளே 20 தொடங்கி 30 வருடங்கள் வரை உயிர் வாழ கூடியதாகும். இது தவிர்த்து பாம்பை கொன்றால் அது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பழி வாங்கும் என்பது கடைந்து எடுத்த பொய்.

  •  நீல ரப்பர் பேனையை அழிக்கும் 

பள்ளிக்காலத்தில் நாம் பயன்படுத்திய இரண்டு நிறத்தில் காணப்படும் அழி ரப்பர் ஒன்று பென்சிலில் எழுதியதை அழிப்பதற்கும் மற்றைய கனமான, சொரசொரப்பு நிறைந்த நீல நிறத்திலான பகுதி பேனாவில் எழுதியதை அழிக்கவும் பயன்படும் என நாமே நினைத்துக்கொண்டதுதான் மிச்சம். உண்மையில் இவ்வகையான அழி ரப்பர் மூலம் பென்சிலில் எழுதியதை வேண்டும் என்றால் இலகுவில் அழித்து விடலாம். மாறாக பேனாவில் எழுதியதை அழிப்பது கடினமாகவே இருக்கும். வெறும் வியாபார யுக்திக்காக அழகிய வடிவமைப்பில் அழிரப்பர் அவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதே உண்மை நிலை ஆகும்.

  • பேய் வராமல் இருக்க 

இரவில் தனியாக உறங்கும்போது நம்மை பேய் அண்டாமல் இருப்பதற்கு எம்மை சுற்றி பாதணிகள் மற்றும் கடவுள் படங்கள் என்பனவற்றை வைத்துக்கொண்டு படுத்த ஞாபகம் இருக்கிறதா? இது இப்போது நினைத்தாலும் நமக்கு சிரிப்பை ஏற்படுத்த கூடிய விடயம் ஆகும். ஏன் இந்த காலத்திலும் ஒரு சிலர் தனியாக வீட்டில் உறங்கும்போது இன்னும் இவ்வகை பொருட்களை வைத்துக்கொண்டு தூங்குவதை அவதானிக்க முடிகின்றது. 

பூட்டிய அறையில் காற்றோட்டம் என்பது தடைபடும், எனவே அங்கு உறங்கும்போது சுவாச தடைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. நாம் தனியாக உறங்கும் போது பேய் அடித்து கொன்றதாக சிலர் கட்டு கதைகளை கூற கேள்விப்பட்டு இருப்போம் .

  • 999 இன் வன் 

சிறுவயதில் சூப்பர் மரியோ , கார் ரேஸிங் போன்ற விளையாட்டுகள் நம்மை ஆட்டிப்படைத்திருக்கும் அனுபவம் உங்களுக்கும் உள்ளதா?. அக்காலத்தில் இவ்வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய காஸட் போன்ற வடிவமைப்பில் இருக்கும் காட்ரிஜ் உபகரணங்களை நாம் பயன்படுத்தி இருப்போம். இவற்றின் லேபிள்களில் 999 விளையாட்டு வகைகள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கும். ஆயினும் நிஜமாக மொத்தமும் 20 இருக்கும் குறைவான விளையாட்டு வகைகளே அவற்றில் இடம்பெற்றுஇருக்கும் என்பதே உண்மை. மாறாக 999 வகைகளும் அந்த 20 விளையாட்டுக்களை மீண்டும் மீண்டும் சீர்திருத்தும், ஒரே மாதிரியான விளையாட்டுக்களாகவும் அமைந்திருப்பதை நீங்கள் கவனித்தது உண்டா?

  • தேனுக்கு பதில் இன்ஜின் எண்ணெய் 

சில உணவு சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீங்கள் கவனித்தால் அதில் எத்தனை போலிகள் உள்ளது என்பதை கண்டறிய முடியாத வண்ணம் கையாண்டு இருப்பார்கள். அவற்றில் ஒன்று தான் தேன் விளம்பரங்கள். விளம்பரத்திற்காக தேனை தாரை தாரையாக கொட்டுவதை போன்று படமெடுத்து இருப்பார்கள். பார்க்கும் நமக்கே ஆச்சரியப்பட வைக்கும்.ஏன் இவ்வளவு தேனை வீணடித்து இருக்கிறார்கள் என்று ஆனால்விலை உயர்ந்த தேன்களை விளம்பரத்திற்காக யாரும் விரயம் செய்ய விரும்புவதில்லை. மாறாக அதே நிறத்தில் இருக்கும் இயந்திர எ��்ணெய்களே இந்த தேனுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது எவரும் அறிந்திடாத தகவல் ஆகும்.

அவ்வாறே ஐஸ்க்ரீம் விளம்பரத்திற்கு பிசைந்த உருளைக்கிழங்கும், பால் விளம்பரங்களுக்கு பால் பசை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • எகிப்தில் அவ்வளவு பிரமிட்டுகள் இல்லை 

பிரமிட்டுக்கள் எனப்படும் கிரேக்க அரசர்களை கல்லறைகளை பற்றி கூறினால் நமக்கு ஞாபகம் வரும் இடம் எகிப்து தான். ஆயினும் உண்மையில் எகிப்தில் அவ்வளவாக பிரமிட்டுக்கள் இல்லை என்பதை அறிவீர்களா? எகிப்தை விடவும் அதிகபட்ச பிரமிட்டுக்களை கொண்ட நகரம் சூடான் தான். அங்கு 255 ற்கும் மேற்பட்ட பிரமிட்டுக்கள் காணப்படுவதாகவும், இவை எகிப்தில் உள்ளவற்றை விட இரண்டு மடங்கு அதிகமானவை என்றும் அறியப்படுகின்றது.

  • ஒலிம்பிக் தங்கத்தில் தங்கமே இல்லை 

உலகின் முன்னணி விளையாட்டில் முக்கிய இடம் வகிப்பது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். பாரம்பரியம்மிக்க விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்க பதக்கங்களில் நிஜமாக தங்கம் பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக வெள்ளியில் அமைந்த பதக்கங்களுக்கு தங்க முலாம் பூசியே வீரர்களுக்கு இதுவரை காலமும் பரிசளித்து வந்துள்ளார்கள் என்பதுவே உண்மையான நிலை ஆகும்

  • எலி எந்த காலத்தில் சீஸை உண்டது?

மிகவும் பிரபலமான சிறுவர் கார்ட்டூன் டாம் அண்ட் ஜெரி. அதில் வரும் எலி சீஸை திருடி செல்வதும், அதனை பூனை துரத்துவதுமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் நிஜத்தில் எலிகள் சீஸ் பதார்த்தங்களை உண்ணுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?. எலிகள் தானிய வகைகளையே அதிகமாக விரும்பி உண்ணக்கூடியது. சீஸை உண்ணாது . 

  • பென்குயின்களுக்கு முழங்கால் உண்டு 

பென்குயின்களின் கால்கள் மிகவும் சிறியது இதன் முழு உடம்பும் கால்களுடன் சேர்ந்தது மறைக்கப்பட்டு இருக்கும் . இவை நடக்கும்போது முழங்கால்கள் இல்லாதது போல உடலை அசைத்து அசைத்தே நடந்து வருவதை கண்டிருப்போம். அப்போது நமக்கு முதலில் தோன்றும் விடயம் இவ்வகை விலங்கினங்களுக்கு முழங்கால் இருக்காது என்பது. ஆனால் பென்குயின்களும் கால்கள் முழங்கால் பகுதியின் எழும்புகள் சகிதம் உடலில் உள்ள தசைகளுக்குள் பொதிந்தவாறு அமையப்பட்டது. எனவே அவற்றின் உடலை அசைத்தபடியே பென்குயின்கள் லாவகமாக நடக்கும் என்பதே உண்மை.

  •  தீக்கோழிகள் தலையை மண்ணில் புதைக்காது.

தீக்கோழிகள் பார்த்தோம் என்றால் அவற்றின் உடலமைப்பானது தலையை விட பெரியதாகவே காணப்படும். இவை உணவுகளை உண்ணும்போது தலை குனிந்தே உண்ணும். அப்போது பார்க்கும்போது அவை தலையை மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டு உணவு உண்பதை போலவே காட்சிதரும். ஆனால் தீக்கோழிகள் தலையை மண்ணில் புதைப்பது இல்லை என்பதே உண்மையான விடயம் ஆகும் 

Article By TamilFeed Media, Canada
10543 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD