வினோத உலகின் விபரீத சட்டங்கள்

தனிமனித ஒழுக்கத்தை பேணும் சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும் . இதில் பல விநோதமானதும் , விபரீதமானதாகவும் அமைந்து விடுவது சுவாரஷ்யமே . அப்படி அமைந்த விபரீத சட்டங்கள் பற்றி அறிவோம்
  • கடற்கரைக்கு பாதணிகளுடன் செல்ல தடை 

இது உங்களை முகம் சுழிக்க வைப்பது தெரிகிறது. இந்த சட்டம் இத்தாலி நாட்டில் நடைமுறையில் உள்ளது. 
பல கடல் பிரதேசத்தை கொண்ட நாடு இத்தாலி. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் இறப்பர் பாதணிகளையே அணிவர். இங்கு பாதணி அணிவது பாதிப்பில்லை ஆயினும் அவற்றை கடலில் நனைக்க தடை விதிக்கப் பட்டுள்ளது . கடல் நனைந்த காலனிகளில் இருந்து வரும் சத்தம் இங்கு வசிக்கும் மக்களில் பலருக்கு பிடிப்பதில்லை என்பதால் கடற்கரைகளை பாதணிகள் அணிய தடை விதித்து சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

  • உருளை கிழங்கு வைத்திருக்க தடை 

இவ்வகை சட்டத்தை கொண்ட நாடு ஆஸ்திரேலியா ஆகும் . இங்கு 50 கிலோவுக்கு மேல் உருளை கிழங்குகளை வைத்திருக்கவோ அல்லது வீதிகளில் கொண்டு செல்லவோ தடை விதைக்கப்பட்டு உள்ளது. அதுவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினராக இருக்க வேண்டியது அவசியம் .

இதற்கான காரணம் ஆஸ்திரேலியா வில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவே இங்கு உருளை கிழங்கு விநியோகத்தினர் மற்றும் நுகர்வோர் நலன் கருதி "1946 ஆம் ஆண்டு உருளைக்கிழங்கு விநியோக சட்டம் " உருவாக்கப்பட்டது. இதன் 22 பிரிவின் படி அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்கள் தவிர்ந்த ஏனையோர் 50 கிலோவுக்கு மேலான உருளைக்கிழங்குகளை விற்பனை செய்ய, கொண்டு செல்ல அல்லது வைத்திருக்க தடை விதைக்கப்பட்டு உள்ளது.
இதனை மீறும் பட்சத்தில் 2000 ஆஸ்திரேலியா டாலர்கள் முத்த 5000 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை தண்டப்பணமாக அறவிடப்படும் . இது அந்த உருளை கிழங்கு பெறுமதியை விட இரு மடங்கானதாகும் 

  • சூயிங்கம் தடை 

இது யாவரும் அறிந்த சிங்கப்பூர் நாட்டின் சட்டம். தூய்மை கடைபிடிப்பில் அதிக அக்கறை கொண்ட சிங்கப்பூருக்கு சூயிங்கம் கொண்டு செல்வது கூட சட்டப்படி குற்றமே.

  • உள்ளாடை அணியாமல் வெளி இடங்களுக்கு செல்ல தடை 

தாய்லந்து நாட்டில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்லு 
போது உள்ளாடைகளை அணிந்தே செல்ல வேண்டும் மாறாக உள்ளாடை அணியப்படாதது கண்டறியப்பட்டால் அது தண்டனைக்கு உரிய குற்றமாகும் .இந்த சட்டம் எதற்கு என அங்கு உள்ளவர்களுக்கு கூட புரியாத புதிர் .

  •  சொந்த வீட்டில் "சுதந்திரமாக " இருக்க தடை 

இதுவும் சிங்கப்பூர் நாட்டின் வினோத சட்டங்களில் ஒன்று . உங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்கள் வீடுகளில் நிர்வாணமாக இருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது . பாலியல் சார் விடயங்களான போர்னோகிராபி விடயத்தில் சிங்கப்பூர் அதிக அக்கறை காட்டி வருகிறது. இது தனி மனித ஒழுக்கம் சார் விடயம் என்பதால் கண்டிப்பானதாகவும் கரிசனை உடையதாகவும் கொள்ளப்படுவதாகும் .

  •  மனைவிக்கு மரியாதை தரும் சட்டங்கள் 

மனைவியின் பிறந்த நாளை மறந்தால் மற்றும் மனைவி மீதான பாலியல் வல்லுறவு ஆண்களுக்கு சங்குதான் 

இது ஆண்களுக்கு கசப்பாகவும் , பெண்களுக்கு இனிப்பாகவும் அமைந்த சட்டம் ஆகும். இவ்வகை சட்டம் சமோவா நாட்டில் நடைமுறையில் உள்ளது. மனைவியின் பிறந்த நாளை மறப்பது மற்றும் மனைவி மீதான பாலியல் வல்லுறவு என்பன தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும் .நியூஸினது இந்த இது நியூசிலாந்தின் பழமை பேணும் சட்டங்களின் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

  •  சோகத்திற்கு தடை சிரிப்பே சிறந்தது.

இத்தாலியில் மிலான் நகரில் உள்ள நல்லதொரு சட்டமே இது. உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக கருதப்படுவது மிலான் ஆகும் . இங்கு மருத்துவமே அல்லது மற்றும் இறுதி சடங்குகளில் கூட முகத்தை சிடுசிடுப்பாக வைத்திருக்க தடை இருக்கிறது.

  •  கால்நடைகளை மதிக்கும் சட்டம்.

ஜார்ஜியா நாட்டின் சட்டம் இது . கால்நடைகள் சாலையை கடக்க முயற்சி செய்யும் பொது வீதியில் செல்லும் வாகனங்கள் நின்று வழி விட வேண்டும் என்கிறது அந்த நாட்டின் சட்டம். 

  • ஏமாற்றும் கணவனை கொல்ல அனுமதி அளிக்கும் சட்டம் 

ஹாங்காங் நாட்டில் நிலவிவரும் இந்த சட்டம் கணவன் தம்மை ஏமாற்றுவது தெரிந்தால் மனைவிக்கு அவரை கொல்ல சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது சீனா வின் பழமை பேணும் சட்டத்தின் அடிப்படையில் உருவானது ஆகும்.

  • கழிவறையில் "பிளஷர் " பயன்படுத்த தடை.

உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் இந்த இருவருக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. 10 மணிக்கு மேல் கழிவறைக்கு செல்பவர்கள் அங்கு உள்ள "பிளஷர்" காலை பயன்படுத்த கூடாது என்கிறது சட்டம்.

 

Article By TamilFeed Media, Canada
3969 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD