நிலை பேண் வளர்ச்சி இலக்குகள். - Sustainable Development Goals

நிலை பேண் வளர்ச்சி இலக்குகள். - Sustainable Development Goals

கடந்த சில ஒரு வாரங்களாக உலகில் அதிகம் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்துள்ள விடயம் தான் இந்த நிலை பேண் வளர்ச்சி இலக்குகள், அதென்ன இலக்குகள் நான் ஏன் அதை தெரிந்து கொள்ளவேண்டும் என நீங்கள் கேட்கலாம் உண்மை என்னவென்றால் இதை நீங்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உலக நாடுகள் அனத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஒழுங்கமைப்பாளராக செயற்பட்டு வருகிறது ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு உலக நாடுகளுக்கு ஒவ்வொரு இலக்குகளையும் வழிநடாத்தும் அறிவுரைகளையும் வழங்குவது வழக்கம், அந்த வகையில் இந்த வருடம் 2015 ம் ஆண்டு முதல் 2030 ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான இலக்காக நிர்ணயித்திருப்பவையே இந்த நிலை பேண் வளர்ச்சி இலக்குகள்.

இலக்குகள் என்பதெல்லாம் சரி அதுவென்ன "நிலைபேண் " எனும் சந்தேகம் இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும் ... உலக நாடுகள் அனைத்துமே தமது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கின்றன எனினும் இந்த பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தூரம் சுற்றுப்புற சூழலை பாதிக்காதவாறும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதைப் பார்த்தால் அது பெரிய...? யே இந்த விடயத்தில் வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் யாரும் யோக்கியமானவர்களாக இல்லாத காரணத்தினால் இப்பொழுது அனைவருக்குமான கிடுகுப்பிடியாக இந்த இரு முக்கிய காரணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கக்கூடிய வளர்ச்சி இலக்குகளை நிலை பேண் வளர்ச்சி இலக்குகளாக கொடுத்துள்ளது ஐ நா!

அட இவ்வளவு பெரிய விடயத்தை இப்பொழுதுதானா ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உணர்ந்துள்ளது? என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் அது பிழை! 1972 ம் ஆண்டு முதலே இந்த எண்ணக்கரு உருவாக்கபட்டு பல வருடங்களாக பல மட்டங்களில் ஆராட்சி செய்து தொண்ணூறாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மில்லெனியம் வளர்ச்சி இலக்குகளாக ஏற்கனவே உலக நாடுகளுக்கு வழங்கப்பட்ட இலக்குகள் இன்று நிலை பேண் இலக்குகளாக தரமுயர்த்தப்பட்டு செப்டெம்பர் 24 ம் திகதி உலக நாடுகளுக்கு வழங்கப்படும்.

உலக மக்கள் அனைவருக்கும் இந்த இலக்குகள் தொடர்பான அறிவு கிடைக்க வேண்டுமென பிரம்பிராயத்தனம் எடுத்திருந்தது ஐநா பல நாட்டு பிரபலங்களும் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் ஐநா தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

தற்போது ஐ நா உறுப்புரிமை உடைய நாடுகள் அனைத்தும் இந்த இலக்குகளை ஏகமனதாக ஏற்பதாக உறுதியளித்திருப்பது பான் கீ மூனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி ... இந்த இலக்கை எட்டுவதற்காக பாப்பரசரும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஐநா கூட்டத்தொடரிலும் பங்கேற்று தனது ஆசீர்வாதத்தை அளித்திருந்தார்.

இவ்வளவு உலகமே வியந்து நயந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த இலக்குகள் என்னவென்று நாமும் அறிய வேண்டாமா? இதோ இந்த 17 நிலை பேண் இலக்குகள்

  • உலகிலிருந்து வறுமையை முழுவதுமாக ஒழித்தல் 
  • பசியை முழுவதுமாக ஒழித்தல்
  • அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம்
  • தரமான கல்வி
  • பால் சமத்துவம்
  • தூய நீர் வழங்கல் மற்றும் கழிப்பு வசதி
  • நியாய விலையில் தூய சக்தி
  • தரமான வேலைவாய்ப்புடன் பொருளாதார வளர்ச்சி
  • புதுமைகளுடன் கூடிய கைத்தொழில் வளர்ச்சி
  • குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
  • நிலை பேண் நகரங்களும் சமுதாயங்களும்
  • பொறுப்புணர்வான நுகர்வுகளும் உற்பத்தியும்
  • காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை
  • நீர்வளமும் உயிர்களும்
  • நிலமும் உயிர்களும்
  • சமாதனம் நீதி இரண்டும் வழங்கும் நிறுவனக் கட்டமைப்புக்கல்
  • இலக்குகளிற்கான உலகளாவிய பங்களிப்பு 

 

ஏற்கும் போது இருக்கும் உற்சாகத்தைப்போல கடின உழைப்பால் அனைத்து நாடுகளும் இதை எட்ட வேண்டுமென நாமும் வாழ்த்துவோம்.

 

Article By DanielQQ MKRobertGN, Lebanon
6341 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD