இந்த அறிகுறிகள் காணப்பட்டால் மிகவும் ஜாக்கிரதை

சாதாரண அறிகுறிகளே சர்க்கரை நோய்க்கு விதை

தற்காலத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக எல்லோரிடத்திலும் காணப்படும் ஒரே விடயம் சர்க்கரை நோய் ஆகும் . வயது வித்யாசம் இன்றி அனைத்து பாலாரிடத்திலும் பொதுவாக ஒரு விடயம் காணப்படும் என்றால் அது நீரிழிவு நோய் ஆகும் .

இந்த நோய் எமது உணவு பழக்க வழக்கங்களால் மட்டும் ஏற்பட்டுவிடுவது இல்லை. புற சூழல் காரணிகள் மற்றும் பரம்பரை அலகுகள் என்பன கூட இந்த நோய்க்கு வித்தாக அமைகின்றது.அமைதியான உயிர்க்கொல்லி இந்த நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் நமது அன்றாட வாழ்வில் தோன்றும் சாதாரண விடயமாக கூட இருக்கலாம்.எனவே அதனை பொருட்படுத்தாமல் விட்டால் பாரதூர விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

இவ்வாறு பின்வரும் அறிகுறிகள் உங்களுக்கும் தோன்றுமானால் நீங்கள்உடனே வைத்தியரை அணுகுவது நல்லது.


1. அதிகப்படியான தாகம் 

நமக்கு தண்ணீர் தாகம் எடுப்பது சாதாரணமானது தான்.ஆனால் அளவுக்கு அதிகமாக நமக்கு தாகம் எடுக்கும் பட்சத்தில் கட்டாயம் நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் எடுக்கிறது என்று நீங்கள் உணரும் பட்சத்தில் கட்டாயம் இது நீரிழிவு நோய்க்கு ஒரு அறிகுறியாக அமைந்துவிடுகிறது என்பதை மறக்க வேண்டாம் .

2. அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

உங்களுக்கு அதிக தாகம் எடுக்கும் பட்சத்தில் நீங்கள் அதிகப்படியாக தண்ணீர் அருந்த வேண்டி வரும்.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிவருகின்றது.அதுபோலவே குருதியில் சர்க்கரையின் அளவு உயர்வடையும் பட்சத்தில் சிறுநீரக உற்பத்தி செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது.இதனால் சிறுநீர் அதிகளவில் வெளியேற வேண்டி வருகின்றது.எனவே இவ்வாறு அடிக்கடி கழிவறைக்கு செல்லும் பாங்கு காணப்பட்டால் வைத்தியரை அணுக தாமதிக்க வேண்டாம் .

3. களைப்பு .
எதுவித பாரதூரமான வேலைகளையும் செய்யாதபோது உங்களுக்கு எப்பொழுதுமே களைப்பாக இருக்கின்றதா? கண்டிப்பாக இதுவும் நீரிழிவுக்கான அறிகுறியே .நீங்கள் வேலைகளை செய்வதில் சோம்பேறிகள் அல்லர் என்ற போதும் உங்களால் அடிக்கடி சோர்வு தன்மை உணரப்படும் எனில் நீங்கள் நீரிழிவு சோதனைக்கு கண்டிப்பாக உட்பட வேண்டியவர்கள் தான் . இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ காணப்பட்டால் குருதியில் கலக்கப்படும் குளுக்கோஸின் அளவு குறைவடைகின்றது,எனவே உடலுக்கு கிடைக்கவேண்டிய ஊட்ட சத்துக்கள் பெறப்படுவது குறைவடைகின்றது.அவ்வாறே உடலுக்கு கிடைக்கவேண்டிய ஆக்சிஜனின் அளவும் குறைக்கப்படுகின்றது. எனவேதான் உடல் சோர்வு நிலை காணப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? 

4. தொற்று 
சிறுநீர் அடிக்கடி கழிப்பதால் பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் நோய் தொற்றுக்கள் ஏற்பட அதிகளவில் வாய்ப்புண்டு .இவ்வாறு அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியரை அணுகிட வேண்டும். 


5. பார்வை கோளாறு 

குருதியில் காணப்படும் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்படுவதால் நமது பார்வை பாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதாவது குருதியில் கலக்கும் குளுக்கோஸ் அளவானது நமது பார்வை வில்லைகளை தாக்கம் விளைவிக்க கூடியது ஆகும்.இதனால் பார்வைக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு .ஒரு சிலருக்கு பார்வை மங்களாவதும்,பார்ப்பவை எல்லாம் இரண்டாக தெரிவதும் நீரிழிவுக்கான அறிகுறியாகும். அதுபோல அதிகமாக கணினி அல்லது தொலைக்காட்ச்சி பார்க்கும்போது கூட கண்கள் உலர்ந்து விடுவதை போல் உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை அணுக தாமதிக்காதீர்கள்.

6. ஆறாத புண்கள் 

லேசாக ஏற்படும் சிறு சிராய்ப்புகள் கூட ஆறுவதற்கு பல காலம் எடுக்கும் என்றால் அதுவும் நீரிழிவுக்கான அறிகுறியே. இதற்கும் குருதியிலுள்ள குளுக்கோஸ் காரணம்.உடலில் ஏற்படும் மாற்றங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைத்துவிடுகின்றது.எனவே காயங்கள் ஏற்படுமிடத்து அவை ஆறாமல் இருக்கும் பட்சத்தில் வைத்திய உதவி அவசியமே. 

7. பசியின்மை.
இக்காலத்தில் பலர் தமது உடல்வாகுவை பேணும் பொருட்டு தமது உணவு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் ஆனால் சாதாரணமாகவே ஒரு சிலருக்கு பசி எடுப்பதில்லை.உடலில் உள்ள சுரப்பிகளின் தொய்வே இவ்வாறு பசியின்மைக்கு மூல காரணம் ஆகும். 

8. உடல் எடை குறைதல்  
உங்களது உடல் எடை குறைவடைந்து செல்வதை நீங்கள் அவதானித்தால் அதுவும் நீரிழிவுக்கான அறிகுறி ஆகும்.குளுக்கோஸின் அளவு மாற்றத்தால் உடல் தசைகளில் உள்ள கொழுப்பை தவிர்த்து புரதத்தின் அளவு சிதிலமடைகின்றது.இவ்வகை உடல் எடை குறைவானது பாதகமானது.எனவே வைத்திய ஆலோசனை அத்தியாவசியம் .

9. தோல் பிரச்சினைகள் 

சாதாரணமாக ஏற்படும் முகப்பரு, மற்றும் சிறு வடுக்கள் என்பன தவிர்த்து அசாதாரணமாக முகத்தில் கருமை படிதல்,தடிப்புக்கள்,சருமத்தில் நமைச்சல் போன்ற கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல்,பாரதூர விளைவு வரை தாமதிக்காமல் வைத்தியரை உடனே அணுகுதல் சாலச்சிறந்தது .

10. மறத்துப்போதல்

ஒரு சிலருக்கு அடிக்கடி கை மற்றும் கால்கள் உணர்வற்று மறத்துபோவதை காணக் கூடியதாக உள்ளது.இவ்வாறானவர்கள் கண்டிப்பாக வைத்திய பரிசோதனைக்கு உட்பட வேண்டியவர்களே.அதாவது குருதியில் குளுக்கோஸ் அளவில் மாற்றம் நிகழ்வதை அடுத்து அவை கவனிக்கப்படாமல் விடும் பட்சத்தில் கண்டிப்பாக இவ்வகை உபாதைகள் தோன்றும்.இது பாரதூரமானது ஆகும்.

11. கேட்கும் திறன் குறைவடைதல் 
நரம்பு மண்டலத்தின்பாதிப்பே இந்த கேட்கும் திறனையும் பாதிக்க செய்கின்றது.உடற்சுரப்புகளின் பாதிப்பே நரம்பு மண்டலத்தின்பாதிப்பு இதனூடாக கட்புலன் திற���ை குறைவடையும்.அதிலும் நீரிழிவு நோயாளருக்கு இதன் பாதிப்பு இரட்டிப்பாக அமைந்துவிடும் என்பதை அறிவீர்களா? 

12. பல் ஈறுகளில் ரத்த கசிவு 

குருதியில் அதிகளவு குளுக்கோஸ் கலக்கப்படுமிடத்து உடலில் பாக்டீரியாவின் அளவை அதிகப்படுத்தும் .இதனால் முதலில் பாதிக்கப்படுவது பற்களின் ஈறுகள் தான்.எனவே நாம் பற்களை துலக்கும் போது ஈறுகள் சேதமடைந்து பற்களின் வழியே ரத்தக்கசிவு ஏற்படும்.இவ்வாறு காணப்பட்டால் மறக்காமல் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.

13. தசை பிடிப்புக்கள். 

நீரிழிவு நோயாளர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடிய உபாதை தசைப்பிடிப்பு.அடிக்கடி கால் பின்புற தசைகளில் இவர்களுக்கு பிடிப்பு ஏற்படும்.அவ்வாறே தொடைகள், முதுகு, பின்புறம் என்பனவற்றில் அடிக்கடி பிடிப்புகள் ஏற்படும் . எனவே அதனை கவனிக்க தவற வேண்டாம் 

14. அதிகப்படியான வியர்வை வெளியேற்றம் 
அனைவருக்கும் வியர்வை வெளியேறும் அளவில் வித்தியாசம் காணப்படும்,ஆயினும் அது நிலையானதாக இருக்கும் பட்சத்தில் பாதிப்புக்கள் இல்லை . மாறாக எமது உடல் சிந்தும் வியர்வையின் அளவில் மாற்றம் காணப்பட்டால் அது கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் . ஒருசில நீரிழிவு நோயாளர்கள் உணவருந்தும் போதும் , உறங்கும்போதும் அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கவனித்து இருப்போம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என எண்ணாமல் கண்டிப்பாக வைத்திய பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

15. தொண்டை, நாக்கு, வாய் உலர்ந்து போதல் 

அடிக்கடி வாயும்,நாக்கும் உலர்ந்து போவதை உணர்ந்தாள் அது நீரிழிவுக்கு ஒரு அறிகுறி.தோற்று பாதிப்புக்களால் இரத்தக்கசிவு என்பன ஏற்பட்டு நாக்கு மற்றும் வாய் என்பன உலர்ந்து போகும் தன்மையை கொண்டிருக்கும் . இதனை கவனிக்க தவறாதீர்கள் 

Article By TamilFeed Media, Canada
3369 Visits

Share this article with your friends.

More Suggestions | Health