சாதாரண பொருட்களிலுள்ள சித்த மருத்துவ குணங்கள்

அசாதாரண நன்மை தரும் சாதாரண பொருட்கள்

நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளது என்பது எங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தீராத நோய், வருத்தம் என்று ஆங்கால மருத்துவத்திற்கு நமது பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யும் எமக்கு நம் வீட்டில் காணப்படும் சில சாதாரண பொருட்களின் மூலமே அவ்வகை நோய்களை இலகுவில் சரி செய்யலாம் என்பது ஆச்சரியமான உண்மை ஆகும்.


இவ்வாறு நமது வீடுகளில் காணப்படும் ஒரு சில பொருட்களில் இருக்க கூடிய மருத்துவ குணங்களும் பயன்களும் என்ன என்பதை பார்க்கலாம் 

 

  • ஜாதிக்காய்: 

தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். 

இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும்.

  • கொத்தமல்லி: 

வீடுகளில் சமையல் கூடத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கொத்தமல்லி விதையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்கும். அத்துடன் பசியைத் தூண்டி வயிற்றில் உள்ள வாயுவை நீக்கும். கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகளவில் உள்ளது. கொத்தமல்லி பொடியை தினமும் உபயோகித்தால் இருதயம் வலிமை பெறும். உடலுக்கு வன்மையும், ஆண்மையும் அதிகரிக்கும்.

  • சீரகம்:

சீர்+அகம்= சீரகம். வயிற்றைச் சீர் செய்வதாலேயே இப்பெயர் பெற்றது. சீரகத்தை மணத்திற்காகவும், செரிமானத்திற்காகவும் உணவில் சேர்ப்பது ஒவ்வொரு வீட்டிலும் வழக்கம். வெந்நீரில் சீரகத்தை போட்டு சிறிது நேரத்திற்கு பின்பு அருந்துவது வழக்கம். பித்த சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் இது சிறந்து விளங்குகிறது. மேலும் வயிறு, சம்பந்தமான நோய்களிலும் இதை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்.

  • திப்பிலி: 

திப்பிலி, சுக்கு, மிளகு திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய் விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு பொடி செய்துகொண்டு அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.

Article By TamilFeed Media, Canada
6891 Visits

Share this article with your friends.

More Suggestions | Health