ரக்பி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா எதிர் நியூசிலாந்து !

2015ம் ஆண்டுக்கான ரக்பி இறுதிப் போட்டி சனிக்கிழமை, 31 அக்டோபர் ( நாளை) Twickenham மைதானத்தில் அவுஸ்ரேலியா அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கின்றது.

இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதில் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளதுடன் இவ் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 154 போடிகளில் நியூசிலாந்து 105 வெற்றிகளையும், அவுஸ்ரேலியா 42 வெற்றிகளையும், 7 போட்டிகள் சமநிலையிலும் நிறைவு பெற்றன. எனினும் இந்த போட்டியில் இரு அணிகளும் தமது முழுத்திறமைகளையும் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. எனவே நியூசிலாந்து கோப்பையை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது அவுஸ்ரேலியா கைப்பற்றுமா? முடிவுகளை நாளை பார்ப்போம்.... 

Article By TamilFeed Media, Canada
3361 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD