காலநிலை மாற்றம் நம்மை ஆட்டிப்படைக்கும் நேரம் இது. தொடங்கியிருக்கும் சித்திரை மாதத்தின் பின்னர் வெயிலின் சீற்றம் நம்மை பாடாய்படுத்தும் என்ற அச்சத்தில் பலரும் தமது அலுவலகங்களை விட்டும், வீடுகளை விட்டும் பகல் நேரங்களில் வெளியே வருவது இல்லை. சுட்டெரிக்கும் சூரியனின் உக்கிரத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த காலத்தில் பலரும் பல்வேறு உபாயங்களை தேட தவறுவதில்லை.
இந்த வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்குதலுடன் நமது சருமத்திற்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இந்த காலத்தில் சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதி தீவிர வெப்ப தாக்குதல் மட்டுமன்றி சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களின் தாக்குதலும் நமது உடல் நிலையையும் , சருமஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்க கூடியது.
சூரிய கதிர்வீச்சின் உக்கிரத்தின் காரணமாக நமக்கு சருமம் சார்ந்த நோய்கள், சருமத்தில் அழற்சி, தோல் சிவத்தல், வலி, வியர்க்குரு, தோல் உரிதல், தலைவலி போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே இந்த காலத்திற்கு ஏற்ப நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொள்ள சில இயற்கையான எளியவகை வீட்டு உபயோகப்பொருட்களைக்கொண்டு எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என பாப்போம்.
- தேன் (Honey)
னில் உள்ள ஈரப்பதன் தன்மை சருமத்தை பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், ஈரப்பதனுடன் வைத்திருக்கவும் அத்துடன் பாதிக்கப்பட்ட சருமத்தை புதுப்பிக்கவும் பயன்படுகிறது. எனவே தேனை பாதிக்கப்பட்ட பகுதியில் அப்படியே தடவியோ அல்லது தேனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்தோ தொடர்ந்தும் ஏழு நாட்களுக்கு சருமத்தின் மீது பூசி வந்தால் உங்கள் சருமத்திற்கு நல்லபலன் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
அவ்வாறே தேன் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியினை கொண்ட மருத்துவப்பொருள் ஆகும் இதனால் தேனை தினமும் குடிநீரில் கலந்து பருகிவருவது உடல் நலத்திற்கும் உகந்தது ஆகும்.
- ஐஸ் கட்டிகள் (ICE CUBES).
சூரிய ஒளியில் தீவிர தாக்கத்தினால் நமது சருமம் வெகுவாக பாதிப்படையும் இதனால் புறத்தோலில் ஏற்படும் சிவத்தல், மற்றும் தோல் உரிதல், அரிப்பு போன்றவற்றுக்கு ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் வைத்து பாதிப்படைந்த இடங்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் வெப்பத்தினால் விரிவடைந்த இரத்த குழாய்களை சுருங்கச்செய்து தோல் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பினை பெற்றுத்தரும்.
எவ்வாறாயினும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
- ஆப்பிள் சீடர் வினிகர் (Apple Ceder Vinegar).
நோயெதிர்ப்பு நுண்ணுயிர்களை (Anti Bacterial) கொண்ட பொருளே ஆப்பிள் சீடர் ஆகும் . அத்துடன் இதில் ஆஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அசிடிக் போன்ற அமிலங்கள் காணப்படுகின்றது. இவை வெயிலினால் ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் சரும பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பினை பெற உதவிடும். இந்த ஆப்பிள் சீடரை ஒரு தெளிப்பானில் (Spray Bottle) தண்ணீருடன் சேர்த்து கலந்து அதனை பஞ்சில் நனைத்தது சருமம் பாதிப்படைந்த இடங்களில் தடவுவதால் பாதிப்புக்களிலிருந்து நிவாரணம் பெறலாம் .
அத்துடன் ஆப்பிள் சீடன் வினிகரை குளிக்கும் தண்ணீரில் கலந்து பின்னர் குளித்தால் சரும பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
- பேக்கிங் சோடா (Baking Soda).
பேக்கிங் சோடாவில் உள்ள வேதிப்பொருள் எமது சருமத்திற்கு உகந்தது. பொதுவாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களை அகற்றிட கூட இதனை பயன்படுத்துவது வழக்கம். பேக்கிங் சோடாவை குளிக்கும் நீரில் கலந்த பின்னர் உடலை நனைத்துவிட்டு பின்னர் துணியால் துடைக்க வேண்டும். இப்படி செய்வதனால் சரும பாதிப்புகளான வீக்கம், கட்டிகள் போன்றன விரைவில் குணமாகும்.
அத்துடன் வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து சருமத்தில் தேய்த்து பின்னர் கழுவி வருவதால் சருமத்தில் உள்ள கருமைத்தன்மை கூட இலகுவில் போகும் என நம்பப்படுகின்றது.
- பால் (Milk).
பாலில் சாதாரண நற்குணங்கள் உள்ளன. அத்துடன் பாலில் உள்ள ஈரப்பதன் சரும பாதுகாப்புக்கு உகந்தது. பாலில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளையம் தண்ணீரும் சேர்த்து பின்னர் அதனை துணியில் நனைத்து சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.
அத்துடன் ஜாதிக்காயை தூளாக்கி அதனை பாலுடன் கலந்து சருமத்தில் பூசி வந்தாலும் பாதிப்புக்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.